/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாதுகாப்பற்ற தொடுதல் எது; சொல்லித்தர விழிப்புணர்வு
/
பாதுகாப்பற்ற தொடுதல் எது; சொல்லித்தர விழிப்புணர்வு
பாதுகாப்பற்ற தொடுதல் எது; சொல்லித்தர விழிப்புணர்வு
பாதுகாப்பற்ற தொடுதல் எது; சொல்லித்தர விழிப்புணர்வு
ADDED : மார் 27, 2025 12:16 AM
கோவை; குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில், மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு தொடர்பாக, பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம், நேற்று நடத்தப்பட்டது.
27வது வார்டு பீளமேடு மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் நடந்த கூட்டத்தில், பாலியல் தீங்குகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் மற்றும் பாலியல் தொந்தரவு, அத்தீங்குகளில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தேர்வை எதிர்கொள்வது மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த பயத்தை போக்குதல் போன்ற தகவல் ஆலோசனை பெற, 14417 என்ற இலவச அழைப்பு மைய எண், மகளிர் நல பாதுகாப்பு உள்ளிட்ட சந்தேகங்கள், தகவல் அளிக்க, 181 என்ற மகளிர் உதவி மைய எண் மற்றும் குழந்தைகள் நலன், பாதுகாப்பு, குழந்தை திருமணங்கள் தடுப்பு சார்ந்த சந்தேகங்கள் மற்றும் தகவல் அளிக்க, 1098 குழந்தைகள் உதவி மைய எண் ஆகிய எண்களை, குடியிருப்பு பகுதிகளில் காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
பீளமேடு போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டர் நஸ்ரின், எஸ்.எஸ்.குளம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரமேஷ் பாபு, கவுன்சிலர் அம்பிகா, தலைமை ஆசிரியர் சகுந்தலா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.