/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின் விபத்து தவிர்க்க செய்ய வேண்டியதென்ன? பொதுமக்களுக்கு மின் வாரியம் விளக்கம்

ADDED : மே 18, 2025 10:59 PM
கோவை; பருவ மழையால் ஏற்படும் மின் விபத்துகளை தவிர்க்க, பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை, மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்:
n மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் அருகே செல்லாதீர்.
n இழுவை கம்பி மீது அல்லது மின்கம்பத்தின் மீது கொடிக்கயிறு கட்டி, துணி காய வைக்கும் செயலை தவிர்க்கவும்.
n இடி அல்லது மின்னலின்போது தஞ்சம் அடைய, மின் கம்பிகள், மின் கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்றவை இல்லாத பகுதிகளை தேர்ந்தெடுங்கள்.
n இடி அல்லது மின்னலின்போது, 'டிவி', மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
n மின் கம்பத்திலோ, இழுவை கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது.
n ஈரமான கைகளோடு ஸ்விட்சை உபயோகப்படுத்த வேண்டாம்.
n புதிய கட்டட பணி மேற்கொள்ளும்போது, அருகில் செல்லும் மின் கம்பிகளை கவனத்தில் கொள்ள வேண்டும்.
n மின் கம்பிகளுக்கு அருகே, உலோகப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.
n புதை மின் வடம் செல்லும் இடத்தில், நிலத்தை துளையிடுதல் அல்லது நிலத்தை தோண்டுவதை தவிர்ப்பது நல்லது.
n மின் தடை ஏற்பட்டால், 94987 94987 என்ற எண்ணில், புகாரை பதிவு செய்ய வேண்டும்.
இத்தகவலை, கோவை மண்டல மின் பகிர்மான தலைமை பொறியாளர் குப்புராணி தெரிவித்துள்ளார்.