/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டுக்குள் பாம்புகள் வருகிறதா தடுக்க செய்ய வேண்டியதென்ன?
/
வீட்டுக்குள் பாம்புகள் வருகிறதா தடுக்க செய்ய வேண்டியதென்ன?
வீட்டுக்குள் பாம்புகள் வருகிறதா தடுக்க செய்ய வேண்டியதென்ன?
வீட்டுக்குள் பாம்புகள் வருகிறதா தடுக்க செய்ய வேண்டியதென்ன?
ADDED : நவ 01, 2025 11:30 PM

மழைக்காலம் துவங்கி விட்டாலே, பாம்பு, தேள், பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்து விடும். இதை தடுக்க, வீடுகளை சுற்றிலும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார், ஓய்வு பெற்ற வன கால்நடை மருத்துவர் அசோகன்.
அவர் கூறியதாவது:
பாம்புகள் மழை மற்றும் குளிர்ந்த காலநிலையில், கதகதப்பான இடங்களை நாடுகின்றன. வீடுகளின் உட்புறம் அல்லது பிற அடைக்கப்பட்ட இடங்கள், இவற்றுக்கு சாதகமாக அமைகின்றன.
மழை காலங்களில் தவளைகள், தேரைகள் மற்றும் எலிகள் போன்ற பாம்புகளின் இரைகளின் நடமாட்டமும் அதிகரிக்கிறது.
இந்த இரைகளை பின்தொடர்ந்து, பாம்புகளும் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வர நேரிடுகிறது. அறியாமல், அவற்றின் மீது மிதிப்பது, கைகளில் எடுக்க முயற்சிப்பது அல்லது அவற்றின் மறைவிடங்களை சீண்டுவது போன்ற செயல்பாடுகளால், பாம்புக்கடி சம்பவங்கள் நடக்கின்றன.
பல விஷப்பாம்புகள், குறிப்பாக கண்ணாடி விரியன் மற்றும் கட்டு விரியன், இரவு நேரங்களில்தான் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. மழைகால இரவுகளில், மக்கள் கவனக்குறைவாக செயல்படும் போது (விளக்குகள் இல்லாமல் நடப்பது, தரையில் படுப்பது) கடிபடும் அபாயம் அதிகரிக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், பல லட்சக்கணக்கான பாம்புக்கடி சம்பவங்கள் பதிவாகின்றன. அவற்றில் ஒரு கணிசமான பகுதி, மழைகாலங்களில் நடக்கிறது.
இதை தவிர்க்க, மழைகாலங்களில் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது, குப்பை மற்றும் பழைய பொருட்கள் குவிப்பதை தவிர்ப்பது, கதகதப்பான மறைவிடங்களில் பாம்புகள் பதுங்காமல் பார்த்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மழைகாலங்களில் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பது, குப்பை மற்றும் பழைய பொருட்கள் குவிப்பதை தவிர்ப்பது, கதகதப்பான மறைவிடங்களில் பாம்புகள் பதுங்காமல் பார்த்துக் கொள்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

