/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாணவர்களின் முதல் தேர்வு எதுவாக இருக்க வேண்டும்? கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி பேச்சு
/
மாணவர்களின் முதல் தேர்வு எதுவாக இருக்க வேண்டும்? கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி பேச்சு
மாணவர்களின் முதல் தேர்வு எதுவாக இருக்க வேண்டும்? கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி பேச்சு
மாணவர்களின் முதல் தேர்வு எதுவாக இருக்க வேண்டும்? கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி பேச்சு
ADDED : மார் 27, 2025 07:11 AM

'எதிர்காலத்தில் ஆளப்போகும் தொழில்நுட்பங்கள்' எனும் தலைப்பில், கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி பேசியதாவது:
வரும் 2029 - 30ம் ஆண்டுகளில் உலகில் மிகப்பெரிய புரட்சி வர உள்ளது. செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அனைத்து இடங்களிலும் இருக்கும். பெரிய மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளோம். இன்று இருக்கும் தொழில்நுட்பம், நாளை இருக்காது.
செயற்கை நுண்ணறிவை கற்பதுடன், அதை பயன்படுத்த துவங்க வேண்டும். கம்ப்யூட்டிங் முறைகள் மாறியுள்ளன. கம்ப்யூட்டர் அறிவியல் படிப்பதுடன், பயன்படுத்தவும் தெரிய வேண்டும். ரோபோட்டிக்ஸில் இன்று மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எதையும் சோதிக்காமல் நம்பக்கூடாது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில், சைபர் செக்யூரிட்டி பெரியளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. பாடத்திட்டத்துடன், கூடுதல் திறன்களை வளர்த்துக் கொண்டால் மட்டுமே, வேலைவாய்ப்பு பிரகாசமாக இருக்கும். இந்தியர்கள் தான் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த கற்றுத்தரப்போகின்றனர். கல்லுாரிகள் குறித்து சோதித்து மாணவர்களை சேர்க்க வேண்டும். கம்ப்யூட்டர் துறையில் கடும் போட்டி இருக்கும். இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை, பயன்படுத்தும் மாணவர்கள் ஒரு சதவீதத்துக்கும் குறைவே.
சோலார் ஆற்றல் தயாரிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ் துறையில் வாய்ப்புகள் உள்ளன. செமிகண்டக்டர் சிப் பேக்கேஜிங் தொழில்நுட்பத்துக்கு, பிரகாசமான வாய்ப்பு உள்ளது. பயோமெடிக்கல் துறையை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம். அதில் செயற்கை நுண்ணறிவை கூடுதலாக கற்றுக்கொள்ளலாம். வெளிநாட்டு மொழிகளை கற்றுக் கொள்வதும் கூடுதல் தகுதியாக இருக்கும். இந்தாண்டு சி.பி.எஸ்.இ., தேர்வுகள் கடினமாக இருந்ததால், 'கட்ஆப்' மதிப்பெண் குறையும். மாணவர்களின் முதல் தேர்வு, கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆக இருக்க வேண்டும். அதன் பின், செயற்கை நுண்ணறிவை தேர்ந்தெடுக்கலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.