தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மருத்துவ உபகரண ஆய்வகம் பணிகள் துவங்குவது எப்போது

மருத்துவ உபகரண ஆய்வகம் பணிகள் துவங்குவது எப்போது

மருத்துவ உபகரண ஆய்வகம் பணிகள் துவங்குவது எப்போது


ADDED : செப் 03, 2026 08:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 08:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழகத்தின் முதல் மருத்துவ உபகரண தர பரிசோதனை ஆய்வகம், கோவையில் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

ஆய்வகத்திற்கான கட்டுமான பணிகள், உபகரணங்கள் வாங்குதல், ஊழியர்கள் நியமித்தல் போன்ற செலவுகளுக்கு ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் 60:40 விகித நிதி பங்கீட்டில் ஆய்வகம் அமைக்கப்படுகிறது.

அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில் ஒரு ஏக்கரில் கட்டடம் கட்ட ரூ.8 கோடி தரப்பட்டது. டெண்டர் பணிகள் மார்ச்சில் முடிந்த பிறகும், பொதுப்பணித்துறை இன்னும் வேலை துவங்காமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்துவிடம் கேட்டபோது,‘‘விரைவில் கட்டடம் கட்ட கோரி கடிதம் கொடுத்துள்ளோம். டி.டி.சி.பி. அப்ரூவல் மற்றும் ஏர்போர்ட் அத்தாரிட்டியிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்ததும் வேலை துவங்கும் என்றும் பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us