/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம் எப்போது? பக்தர்கள் எதிர்பார்ப்பு
/
வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம் எப்போது? பக்தர்கள் எதிர்பார்ப்பு
வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம் எப்போது? பக்தர்கள் எதிர்பார்ப்பு
வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம் எப்போது? பக்தர்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 09, 2025 06:50 AM
சூலுார்: சூலுார் வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக தேதியை அறநிலையத்துறையினர் விரைவில் அறிவிக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சூலுாரில் உள்ள தையல்நாயகி சமேத வைத்தீஸ்வர் கோவிலில், பல மாதங்களாக திருப்பணிகள் நடந்தன. இறுதிகட்ட பணிகள் முடிந்து கும்பாபிஷேகத்துக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், சூலுார் எம்.எல்.ஏ., கந்தசாமி, கோவில் கும்பாபிஷேகத்தை விரைந்து நடத்த வேண்டும், என, கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வரும் மே மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும், எனக்கூறினார்.
இதையடுத்து, கோவில் கும்பாபிஷேகத்துக்கான தேதி குறிக்கப்பட்டு, கோவை மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை, என கூறப்படுகிறது. இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:
கோவில் கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்பட்டால், விழாவுக்கான பணிகளை துவங்க முடியும். மூன்று தேதிகள் முடிவு செய்யப்பட்டு அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அனுமதி வழங்காமல், அதிகாரிகள் கால தாமதம் செய்வது வருகின்றனர். அழைப்பிதழ் அச்சடித்தல், யாகசாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு கால அவகாசம் வேண்டும். அதனால், கும்பாபிஷேக விழாவுக்கு, அறநிலையத்துறை அதிகாரிகள் விரைந்து அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு, பக்தர்கள் கூறினர்.

