UPDATED : அக் 29, 2026 10:51 PM
ADDED : அக் 29, 2026 10:46 PM
அ நிறம் | அளவு
கோவை: பாரதியார் பல்கலைக்கழக நீச்சல் குளத்தில், கடந்த ஏப்ரல் மாதம் நீச்சல் பயிற்சியின் போது மாணவர் ஒருவர் உயிரிழந்தார். நீச்சல் குளம் மூடப்பட்டது.
குளத்தை சுத்தப்படுத்தி, தேவையான திருத்தங்கள் செய்து மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்தது.
ஆனால், பல மாதங்கள் கடந்தும் நீச்சல் குளம் திறக்கவில்லை. இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகியிடம் கேட்டபோது, ”சுத்தப்படுத்தும் பணி நடக்கிறது. முடிந்ததும், நீச்சல் குளம் விரைவில் திறக்கப்படும்” என்றார்.
