/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுகாதார வளாகத்தை சீரமைப்பது எப்போது?
/
சுகாதார வளாகத்தை சீரமைப்பது எப்போது?
ADDED : டிச 26, 2024 10:19 PM

நெகமம்; நெகமம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேற்கூரை சேதமடைந்துள்ளதால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெகமம், அரசு துணை சுகாதார நிலையத்திற்கு, நெகமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினமும் நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். சுகாதார நிலைய வளாகத்தின் வெளிப்புற மேல்பகுதியில், சிமென்ட் பூச்சு சேதமடைந்து இரும்புக்கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மேலும், மருத்துவமனை கட்டடத்தின் உள்பகுதியில், நோயாளிகள் அமரும் இடம் மற்றும் மருந்து வழங்கும் இடத்திற்கு மேல் பகுதியிலும், கான்கிரீட் பூச்சு சேதமடைந்துள்ளது. இதனால், நோயாளிகள் அச்சத்துடன் காத்திருக்கின்றனர்.
எனவே, மக்கள் பாதுகாப்பு கருதி, சுகாதார நிலைய கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும், என, வலியுறுத்தப்பட்டுள்ளது.