/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குவது எப்போது
/
கோவில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குவது எப்போது
ADDED : செப் 16, 2025 09:55 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கோதவாடி மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்காததால் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, கோதவாடி மாரியம்மன், விநாயகர் கோவில் பழமையானது. இந்த கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலில் சரியான பராமரிப்பு பணிகள் செய்யப்படாததால் கோபுர சிற்பங்களும், கோவிலில் சில பகுதிகள் சிதிலமடைந்து காணப்பட்டது. இதை கண்ட பக்தர்கள் கோவிலை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
கடந்த ஆண்டு அறநிலையத்துறை அதிகாரிகள் கோவிலை ஆய்வு செய்து, 12.50 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்து, நலிவடைந்த கோவில்கள் பட்டியலில் சேர்த்து, கோவில் புனரமைப்பு செய்ய வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தனர்.
ஆனால், ஒரு ஆண்டு கடந்தும் இந்த கோவிலுக்கு தற்போது வரை நிதி ஒதுக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, கோவிலை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.