/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொட்டில் பயணத்துக்கு விமோசனம் எப்போது? ரோடு வசதியின்றி தவிக்கும் பழங்குடி மக்கள்
/
தொட்டில் பயணத்துக்கு விமோசனம் எப்போது? ரோடு வசதியின்றி தவிக்கும் பழங்குடி மக்கள்
தொட்டில் பயணத்துக்கு விமோசனம் எப்போது? ரோடு வசதியின்றி தவிக்கும் பழங்குடி மக்கள்
தொட்டில் பயணத்துக்கு விமோசனம் எப்போது? ரோடு வசதியின்றி தவிக்கும் பழங்குடி மக்கள்
ADDED : அக் 10, 2025 12:16 AM

வால்பாறை; பழங்குடியின மக்கள் வசிக்கும் செட்டில்மென்ட் பகுதியில் ரோடு வசதி இல்லாதால், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வால்பாறையில், பாலகணாறு, சங்கரன்குடி, கல்லார் குடி, கவர்க்கல், நெடுங்குன்றம் உள்ளிட்ட செட்டில்மென்ட் பகுதியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
அடர்ந்த வனப்பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கின்றனர். மேலும் வனத்துறை சார்பில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் விவசாயம் செய்து வாழ்கின்றனர். இந்நிலையில் பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் ரோடு, நடைபதை, மின்விளக்கு வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, ரோடு வசதி இல்லாததால் நோயாளிகளை தொட்டில் கட்டி துாக்கி வரும் பரிதாப நிலை நீடிக்கிறது.
பழங்குடியின மக்கள் கூறியதாவது:
வனப்பகுதியில் நாங்கள் வசித்தாலும், எங்களுக்கு அரசின் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை. குறிப்பாக, குடிநீர், ரோடு, மின் விளக்குகள், கழிப்பிடம் உள்ளிட்டவை செய்துதரப்படவில்லை.
வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சோலார் மின் விளக்கும் அடிக்கடி பழுதாகி விடுகிறது. நகராட்சி சார்பில் கூடுதல் தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும். செட்டில்மென்ட் பகுதிக்கு செல்ல ரோடு வசதி இல்லாததால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களை தொட்டில் கட்டி துாக்கி செல்லும் நிலை உள்ளது.
குறிப்பாக, சங்கரன்குடி, பாலகணாறு, கல்லார்குடி, உடுமன்பாறை உள்ளிட்ட செட்டில்மென்ட் பகுதியில் ரோடு வசதி இல்லாததால் பழங்குடியின மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வால்பாறை நகராட்சி சார்பில் செட்டில்மென்ட் பகுதிக்கு ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தயாராக உள்ளோம். வனத்துறை அனுமதி வழங்கினால், ஆய்வுக்கு பின் செட்டில்மென்ட் பகுதியில் ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க நகராட்சி சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.