/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை எப்போது?
/
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை எப்போது?
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை எப்போது?
மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை எப்போது?
ADDED : அக் 14, 2025 09:52 PM
கோவை; மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக, நிதி ஒதுக்கீடு செய்தும், கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு, அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
மாநகராட்சியின் கீழ் தற்போது 83 ஆரம்பப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 17 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 148 பள்ளிகள் இயங்கி வருகின்றன. மாணவர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடையாள அட்டை வழங்கவில்லை.
2024---2025 நிதியாண்டில், புதிதாக சேரும் மாணவர்கள் மற்றும் அடையாள அட்டை இல்லாத பிற மாணவர்களுக்கும் சேர்த்து, அடையாள அட்டைகள் வழங்க ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக, மாநகராட்சி அறிவித்தது.
அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும், இதுவரை அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை பயன்படுத்தி, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க, நிர்வாகம் முன்வர வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.