ADDED : ஆக 28, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
கோவை, ஆக.29-
நகரில் 24 மணி நேரம் குடிநீர் தருவதற்கான வேலைகள் 58 வார்டுகளில் முடிந்துள்ளது. மீதமுள்ள 42 வார்டுகளிலும் வேலை நடக்கிறது. வேலை முடிந்த இடங்களில் நால் முழுவதும் தண்ணீர் வருவதில்லை என புகார் வந்துள்ளது.
மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜாவிடம் கேட்டபோது, 58 வார்டுகளில் ஒன்றரை லட்சம் இணைப்புகள் கொடுக்க வேண்டும். ஒன்றே கால் லட்சம் கொடுத்துள்ளோம். மீதியும் செப்டம்பரில் முடியும். அக்டோபரில் செயலுக்கு வரும். தினமும் 33 கோடி லிட்டர் நீர் தேவை. மழை குறைவால் 24 மணி நேரம் தர முடியவில்லை என்றார்.
