தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒரு கட்டடத்தின் சேதாரம் துவங்கும் இடம் எங்கே?

ஒரு கட்டடத்தின் சேதாரம் துவங்கும் இடம் எங்கே?

ஒரு கட்டடத்தின் சேதாரம் துவங்கும் இடம் எங்கே?


UPDATED : நவ 13, 2026 04:54 PM

ADDED : நவ 13, 2026 04:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 13, 2026 04:54 PM ADDED : நவ 13, 2026 04:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மொட்டை மாடியை பராமரிக்கவில்லை என்றால் மழைக்காலங்களில் கட்டட வலிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். கான்கிரீட் கூரைகளில் ‘வாட்டர் மார்க்’ எனப்படும் மழை தண்ணீரின் ‘பேட்ச்’கள் ‘பிரவுன்’ கலரில் வட்ட வட்டமாக தெரியும். இது வேறொன்றுமில்லை. ‘ரூப் சிலாப்’களில் உள்ள எக்கு கம்பிகளில் துருப்பிடித்த கரைதான் என்கிறார், ‘கொசினா’ உறுப்பினர் மாரிமுத்துராஜ்.

அவர் பகிர்ந்து கொண்டதாவது...

தண்ணீரானது சிலாப்பில் இறங்கி கூரையில் வர்ணம், சுண்ணாம்பு பூச்சு, வெள்ளை நிறத்தை மாற்றி மங்கலான மரக்கலரில் வட்டமாக ஆங்காங்கே தெரியும். இதெல்லாம் மொட்டை மாடியில் மழை நீர் புகுந்து எக்கு கம்பிகள் அரிக்கப்பட்டதன் அறிகுறிகளாகும்.

மழை நீரால் மட்டுமின்றி தண்ணீர் தொட்டி நிரம்பி வழியும் போதும், மேல் மாடியிலுள்ள குழாய் பாதையில் கசிவு ஏற்படும்போதும் இந்த பாதிப்புகள் வரலாம். ‘வெதரிங் கோர்ஸ்’ டைல்ஸ்களில் மேடு பள்ளத்தினால் மற்றும் மழைநீர் வடியும் குழாயில் உள்ள அடைப்புகளால் மழை காலங்களில் மழைநீர் மொட்டை மாடியில் தேங்குவது முக்கிய காரணம்.

காற்றில் அல்லது வீட்டை சுற்றியுள்ள மரங்களில் இருந்து வரும் இலைகளினால் மழைநீர் வெளியேற முடியாது துவாரங்களில் அடைப்பு ஏற்படுகிறது. தண்ணீர் தொட்டி நிரம்பி வழிவதால் மொட்டை மாடியில் உள்ள வெதரிங் கோர்ஸ் டைல்ஸ் ஈரமடைகிறது.

மேற்கூரைகள் கட்டப்படும்போது கான்கிரீட்டில் கூடுதலாக தண்ணீர் சேர்ந்து இருந்தால் அவை வெயில்பட்டு நீராவி ஆகி தண்ணீர் இருந்த இடத்தில் சிறிய குண்டூசி அளவுக்கு துவாரங்கள் ஏற்பட்டு, அந்த துவாரங்களின் வழியே தண்ணீர் சிலாப்பில் உள்ள எக்கு கம்பிகளுக்குள் சென்று நாளடைவில் துருப்பிடிக்க செய்யும்.

மொட்டை மாடியில் போடப்பட்டிருக்கும் குழாய்களில் வடியும் தண்ணீரும் விரிசல் உண்டாக காரணம். மொட்டை மாடியை மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மொட்டை மாடியை பராமரிக்க வேண்டும்.

மிக முக்கியமாக டைல்ஸ் இணைப்புகளில் ‘ஒயிட் சிமென்ட்’ அல்லது ‘டைல் கிரவுட்டிங்’ விடுபட்டிருந்தால், அந்த இடங்களை மழை நீர் புகாதபடி பூச வேண்டும். தண்ணீர் தொட்டி நிரம்பி வழிவதற்காக உள்ள குழாய் மொட்டை மாடிக்கு செல்லாமல் தோட்டப் பகுதிக்கு செல்லுமாறு செய்யலாம்.

பெரும்பாலான குழாய்கள் மொட்டை மாடியில் குறுக்கும் நெடுக்குமாக செல்லும். மொட்டை மாடிகளில் போடப்பட்டுள்ள குழாய் இணைப்புகளின் கசிவுகளை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும். மொட்டை மாடியில் வெதரிங் கோர்ஸ் டைல்ஸ் போடாமல் இருப்பதும் பாதிப்புகளுக்கு முக்கிய காரணம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us