தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எந்த கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு எந்த கல்லுாரியில் சீட் கிடைக்கும் இன்ஜி. வழிகாட்டி நிகழ்ச்சி நாளை நடக்கிறது

 எந்த கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு எந்த கல்லுாரியில் சீட் கிடைக்கும் இன்ஜி. வழிகாட்டி நிகழ்ச்சி நாளை நடக்கிறது

 எந்த கட்-ஆப் மதிப்பெண்ணிற்கு எந்த கல்லுாரியில் சீட் கிடைக்கும் இன்ஜி. வழிகாட்டி நிகழ்ச்சி நாளை நடக்கிறது


ADDED : ஜூன் 19, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்புகளில் சேர காத்திருக்கும் மாணவர்களுக்கு, கட் ஆப் மதிப்பெண்களுக்கு ஏற்ப எந்த கல்லுாரியில் என்ன படிப்பில் சேரலாம் என, நாளை நடக்கும், 'தினமலர்' இன்ஜி. வழிகாட்டி நிகழ்ச்சியில் விரிவாக விளக்கப்படவுள்ளது.

'தினமலர்' நாளிதழ் மற்றும் ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லுாரி சார்பில், இன்ஜி. கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, நாளை (ஜூன் 20ம் தேதி), ஆர்.எஸ். புரம், டி.வி. சாமி ரோடு மாநகராட்சி கலையரங்கில், காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதில், கோ-ஸ்பான்சர் ஆக, கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தார் இணைந்துள்ளனர்.

பிளஸ் 2 முடித்து, பி.இ., மற்றும் பி.டெக்., ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், இணையவழி கலந்தாய்வில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், எப்படி கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு தேர்வு செய்வது, எந்த கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு, எந்தெந்த கல்லுாரியில் என்னென்ன பாடப்பிரிவுகள் கிடைக்கும் என்பன போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு, வழிகாட்டி நிகழ்ச்சியில், வல்லுநர்கள் விளக்கம் அளிக்கவுள்ளனர்.

இன்ஜி., படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில், இந்த ஆண்டு உங்கள் கட்-ஆப் மதிப்பெண்கள்; நவீன தொழில்நுட்ப படிப்புகளின் எதிர்காலம்; சிறந்த கல்லுாரியை தேர்வு செய்யும் முறை ஆகியவை குறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி விளக்குகிறார்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன், இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் நேரடி விளக்கம் அளிக்கிறார். குறிப்பாக ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், 'புரொவிஷனல் அலாட்மென்ட்' பெறுதல், இந்தாண்டு கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்கள் குறித்து விளக்கப்படவுள்ளது.

மாணவர்கள், பெற்றோர் கேள்வி எழுப்பி சந்தேகங்களுக்கு பதில்களை பெறலாம். மாணவர்களின் எதிர்காலம் சிறக்க பெற்றோர் ஒவ்வொருவரும் தவற விடக்கூடாத நிகழ்ச்சி.

இதில் பங்கேற்க அனுமதி இலவசம். இதற்கு, 'க்யூ.ஆர். கோடு' ஸ்கேன் செய்து அல்லது 95667 77833 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு, RGN என்று டைப் செய்து பதிவு செய்வது அவசியம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us