/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முட்டுக்கொடுக்க சவுக்கு கம்பு: வாழையை வாழ வைக்கலாம்
/
முட்டுக்கொடுக்க சவுக்கு கம்பு: வாழையை வாழ வைக்கலாம்
முட்டுக்கொடுக்க சவுக்கு கம்பு: வாழையை வாழ வைக்கலாம்
முட்டுக்கொடுக்க சவுக்கு கம்பு: வாழையை வாழ வைக்கலாம்
ADDED : மே 13, 2025 10:09 PM
சூலுார்,:
'காற்றின் பாதிப்பில் இருந்து வாழை மரங்களை காக்க, சவுக்கு கம்புகளை ஊன்றுகோலாக முட்டுக் கொடுத்து பாதுகாக்கலாம்' என, தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
சுல்தான்பேட்டை வட்டாரத்தில், அய்யம்பாளையம், ஜே.கிருஷ்ணாபுரம், தாளக்கரை, வைம்பச்சேரி, பூராண்டாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், பல நுாறு ஏக்கரில் வாழை சாகுபடி நடக்கிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் வீசிய பலத்த காற்றினால், 3,000 வாழைகள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். காற்றின் பாதிப்பில் இருந்து வாழை மரங்களை பாதுகாக்கும் முறைகள் குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:
காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் உள்ள வாழை மரங்களின் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு, மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை, காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில், ஊன்றுகோலாக முட்டுக் கொடுக்க வேண்டும்.
முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். வாழைத்தார்களை மூடி வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், வாழை மரங்கள் காற்றினால் சேதமடைவதை தடுக்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.