/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளை ஈ மேலாண்மை மாணவர்கள் விழிப்புணர்வு
/
வெள்ளை ஈ மேலாண்மை மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஜன 24, 2026 04:59 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சட்டக்கல்புதூர் பகுதியில் வெள்ளை ஈ மேலாண்மை குறித்து, வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சியில் வாணவராயர் வேளாண் கல்லூரி மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சட்டக்கல்புதூர் கிராமத்தில், உள்ள விவசாயிகளுக்கு தென்னை மரங்களை தாக்கும் வெள்ளை ஈக்கு எதிரான மேலாண்மை முறைகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
மேலும், தென்னை மரங்களில் வெள்ளை ஈ தாக்கத்தின் அடையாளங்கள், விளைச்சலில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் குறித்தும், நடைமுறை ரீதியில் கட்டுப்பாட்டு வழிமுறைகள் குறித்தும் கூறப்பட்டது.
வெள்ளை ஈயை கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுப்பொறி அமைத்தல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தினர்.

