sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சியோடு இணைய மறுக்கும் ஊராட்சிகளை துாண்டி விடுவது யாரோ? கிராம சபாவில் 'கொந்தளித்த' பின்னணி ரகசியம்

/

மாநகராட்சியோடு இணைய மறுக்கும் ஊராட்சிகளை துாண்டி விடுவது யாரோ? கிராம சபாவில் 'கொந்தளித்த' பின்னணி ரகசியம்

மாநகராட்சியோடு இணைய மறுக்கும் ஊராட்சிகளை துாண்டி விடுவது யாரோ? கிராம சபாவில் 'கொந்தளித்த' பின்னணி ரகசியம்

மாநகராட்சியோடு இணைய மறுக்கும் ஊராட்சிகளை துாண்டி விடுவது யாரோ? கிராம சபாவில் 'கொந்தளித்த' பின்னணி ரகசியம்

2


ADDED : ஜன 29, 2025 06:39 AM

Google News

ADDED : ஜன 29, 2025 06:39 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாநகராட்சியோடு, அருகாமையில் உள்ள ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபா கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த கிராம சபாக்களில், இதுபோன்ற எதிர்ப்புகள் எழாத நிலையில், உள்ளாட்சி தலைவர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட முதல் கூட்டத்தில், ஊர் மக்களே திரண்டு வந்து ஆட்சேபனை தெரிவித்ததற்கு, பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

கோவை மாநகராட்சி யோடு மதுக்கரை நகராட்சி, பேரூர், வேடபட்டி, இருகூர், வெள்ளலுார் பேரூராட்சிகள், நீலாம்பூர், மயிலம்பட்டி, சின்னியம்பாளையம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், அசோகபுரம், கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, சீரப்பாளையம் ஆகிய ஒன்பது ஊராட்சிகளை இணைக்க, சமீபத்தில் அரசாணை வெளியிடப்பட்டது.

துாண்டுவதன் பின்னணி


இதற்கான நிர்வாக பணிகள், துரிகதியில் நடந்து வருகின்றன. இதற்கு, ஒன்பது ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கிராம சபா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இவ்விஷயத்தில், பொதுமக்களை யாராவது துாண்டி விடுகிறார்களா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

ஏனெனில், இவ்வூராட்சிகள் மாநகராட்சியில் இணைந்து விட்டால், வார்டு மறுவரையறை செய்யப்படும். இப்பகுதியை சேர்ந்தவர்கள் கவுன்சிலர் பதவிக்கு மட்டுமே வர முடியும். அரசியல் கட்சி செல்வாக்கு உள்ளவர்கள், மண்டல தலைவர் பதவியை கைப்பற்ற முடியும்.

மாநகராட்சி கவுன்சிலர் பதவியை பெற்றாலும், அது, ஊராட்சி தலைவர் பதவிக்கு ஈடாகாது. மாநகராட்சியோடு இணைந்து விட்டால், அவ்வூராட்சிகள் கலைக்கப்பட்டு விடும் என்பதால், அரசியல் கட்சியினர் கலக்கத்தில் இருக்கின்றனர்.

இதேபோல், மாநகராட்சியோடு இணைக்கப்படும் ஊராட்சிகள், பேரூராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளோடு, இணைக்கப்படும் ஊராட்சிகளில் பணிபுரியும், ஊராட்சி செயலர்கள் மற்றும் இதர பணியாளர்களை, கோவை மாவட்டத்தில் உள்ள வேறு ஊராட்சிகளுக்கோ அல்லது அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கோ, இட மாறுதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

அதற்கான பட்டியலை அனுப்ப, மாவட்ட நிர்வாகத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இது, ஊராட்சி அலுவலர்கள் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது முதல் முறை


கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த கிராம சபா கூட்டங்களில், ஒருமுறை கூட பொதுமக்கள் தரப்பில் எவ்வித எதிர்ப்பும் கிளம்பியதில்லை; உள்ளூர் பிரச்னை தொடர்பாக மட்டுமே பதிவாகியுள்ளன. மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிந்த பின், ஊராட்சி தலைவர்கள் இல்லாமல் நடத்தப்பட்ட முதல் கிராம சபா கூட்டத்தில், பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பொதுமக்கள் மூலமாக எதிர்ப்புகளை பதிவு செய்து, மாநகராட்சியோடு இணைக்கும் தமிழக அரசின் முடிவை நிறுத்தி வைப்பதற்கான வழியாக, கிராம சபா கூட்டங்கள் கையாளப்பட்டு இருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'அரசாணை அடிப்படையில், 14 உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. நிர்வாக ரீதியான ஆவணங்கள் சேகரிக்கப்படுகின்றன.

அருகாமையில் உள்ள உள்ளாட்சிகளை, மாநகராட்சியோடு இணைக்கும்போது, நகரம் வளர்ச்சி அடையும். உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும்' என்றனர்.

ஆக, எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், இணைப்பும் உறுதி; வளர்ச்சியும் உறுதி என்பது தெளிவாகிறது.






      Dinamalar
      Follow us