sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

சித்ரா... மித்ரா ( கோவை)

/

மாமூல் வசூலிக்கும் 'சார்' யாரு?

/

மாமூல் வசூலிக்கும் 'சார்' யாரு?

மாமூல் வசூலிக்கும் 'சார்' யாரு?

மாமூல் வசூலிக்கும் 'சார்' யாரு?


ADDED : நவ 11, 2025 12:59 AM

Google News

ADDED : நவ 11, 2025 12:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ப ணி நிமித்தமாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குச் சென்றிருந்த சித்ரா, 'பார்க்கிங்' ஏரியாவில் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, கேன்டீன் நோக்கி நடந்தாள்.

பின் தொடர்ந்து வந்த மித்ரா, ''கல்லுாரி மாணவிக்கு நடந்த பாலியல் சம்பவத்துல ஏகப்பட்ட இன்பர்மேஷன் முன்னுக்குப் பின் முரணா இருக்குதே...'' என, நோண்டினாள்.

''ஆமாப்பா... போலீஸ்காரங்க சிலபேர்கிட்ட விசாரிச்சேன். கார்ல இருக்கும்போது, போதையில வந்த அந்த மூனு பேரு, அவுங்கள்ட்ட அத்துமீறி நடந்திருக்காங்க. பம்ப் ஹவுஸ்க்கு துாக்கிட்டு போயி, பாலியல் பலாத்காரம் செஞ்சதா, 'என்கொயரி'யில ஒத்துக்கிட்டாங்க. மூனு பேர்ல ஒருத்தன், தன்னோட சட்டையை கழற்றி, அந்த பொண்ணுக்கு கொடுத்துட்டு போயிருக்கான்,''

''நிர்வாணமா அந்த பொண்ணை மீட்டாங்கன்னு சொன்னது கதையாம். பதுங்கியிருந்தவங்களை 'சுட்டுப்பிடிச்சோம்'னு சொல்றதும், கிரைம் திரில்லர் வகையை சேர்ந்ததுன்னு சொல்றாங்க.

போலீஸ் தரப்புல டீட்டெய்லா 'என்கொயரி' செஞ்சிட்டு, வெளியே 'இன்பர்மேஷன்' சொல்லாம இஷ்டத்துக்கு 'அள்ளி' விட்டதுனால, கவர்மென்ட் மேல எதிர்க்கட்சிக்காரங்க பாயுறதுக்கு வாய்ப்பா அமைஞ்சு போச்சுன்னு சொன்னாங்க,''

''எதிர்க்கட்சிக்காரங்க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துனாங்களே...''

''ஆமா, மித்து! பா.ஜ., - அ.தி.மு.க., - த.வெ.க.,கட்சிக்காரங்க நடத்துனாங்க. அதுல, த.வெ.க., நடத்துன ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டம் ஜாஸ்தியா இருந்துச்சு. முந்துன நாள் நைட் அறிவிப்பு வந்துருக்கு; மறுநாள் மத்தியானம் ஏற்பாடு செஞ்சு, 'வெயிட்' காட்டியிருக்காங்க. அத்தனை பேரும் யூத். வழக்கம்போல 'செல்பி' எடுத்து, சமூக வலைதளத்துல பதிவிடுறதுல ஆர்வம் காட்டுனாங்க. ஆளுங்கட்சியில செய்ற மாதிரி, 'வாட்ஸ் அப்' குரூப் ஆரம்பிச்சு, நம்மூர்ல இருக்கற பத்திரிகையாளர்களை இணைச்சு, ஆர்ப்பாட்டம் தகவலை ஒடனுக்குடன் 'அப்டேட்' பண்ணுனது ஆச்சரியமா இருந்துச்சு,'' என்றபடி, கேன்டீனுக்குள் நுழைந்தாள் சித்ரா.

அனுமதி இல்லாத 'பார்' ''பாலியல் விவகாரத்துல சிக்குன மூனு பேர், 'சரக்கு' அடிச்ச 'பார்' இல்லீகலா செயல்பட்டதாமே...''

''ஆமாப்பா... ஏ.டி.எம்.கே., பிரமுகரோட பழைய பார். கவர்மென்ட் ரிக்கார்டு படி அதை மூடி நாலு வருஷத்துக்கு மேலாச்சாம். இருந்தாலும் அனுமதி இல்லாம சரக்கு சேல்ஸ் நடந்துட்டு இருந்திருக்கு; லோக்கல் போலீஸ்காரங்களும் கண்டுக்காம இருந்திருக்காங்க. 'டாஸ்மாக்' ஆபீசர்களும், கலால் ஆபீசர்களும் எட்டிக்கூட பார்க்கலை. நாம் தமிழர் கட்சிக்காரங்க சூறையாடுனதுக்கு அப்புறம்தான் இதுசம்பந்தமா விசாரிச்சிருக்காங்க...''

''போலீஸ் தரப்புல விசாரிச்சப்போ, அ.தி.மு.க., ஆட்சி காலத்துல 'பார்'கள்ல வசூல் வேலை ரெண்டு பேர் நடத்துன அனுமதியில்லாத 'பார்'ன்னு தெரிஞ்சுச்சு. இதே மாதிரி, அன்னுார், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம்னு ரூரல் ஏரியாவிலயும், சிட்டிக்குள்ளேயும் 'இல்லீகல் பார்' இன்னும் செயல்படுதுன்னு சொல்றாங்க,''

ஆளுங்கட்சி வசூல் ''சின்னவர் பெயரைச் சொல்லி, 'டாஸ்மாக்' கடைகள்ல ஆளுங்கட்சியை சேர்ந்தவங்க, வசூலை ஆரம்பிச்சிட்டாங்களாமே...'' என கேட்டாள்.

''ஆமாப்பா, உண்மைதான்! டெபுடி சி.எம்., பர்த்டே இந்த மாசக்கடைசியில வருது. தடபுடலா கொண்டாடுறதுக்கு, மேட்டுப்பாளையம் வடக்கு நகர தி.மு.க.,வை சேர்ந்தவங்க டாஸ்மாக் கடையில ஆரம்பிச்சு ஏகப்பட்ட இடங்கள்ல, வசூல் பண்ணிட்டு இருக்காங்க. இதைக்கேள்விப்பட்டு முக்கிய பிரமுகர்கள், தொழில் நிறுவனத்தை சேர்ந்தவ புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க,''

தோழர்களின் மாநாடு இரண்டு டீ ஆர்டர் கொடுத்து விட்டு, இருக்கையில அமர்ந்த மித்ரா, ''அதெல்லாம் இருக்கட்டும். சி.ஐ.டி.யு., மாநில மாநாடு நம்மூர்ல நாலு நாள் நடந்துச்சே... அதைப்பத்தி எதுவுமே சொல்லலையே...'' என, வம்புக்கு இழுத்தாள்.

''கம்யூ., தொழிற்சங்கத்துல இருந்து 'இந்தளவு'க்கு செலவு செஞ்சிருக்காங்களேன்னு ஆச்சரியப்படுற அளவுக்கு, திராவிட கட்சிக்காரங்க நடத்துற மாதிரி, தடபுடலா இருந்துச்சு. ஸ்டேட் லெவல் மீட்டிங்கிறதுனால, 10 ஆயிரத்தை தாண்டும்னு எதிர்பார்த்திருக்காங்க. பேரணியில 6,000 பேர் கலந்துக்கிட்டாங்க. இவுங்கள்ல பாதிப்பேரு மீட்டிங் எடத்துக்கு வந்ததும் கலைஞ்சு போயிட்டாங்கன்னு, உளவுத்துறையில இருந்து மேலிடத்துக்கு 'ரிப்போர்ட்' போயிருக்கு,''

ஆளுக்கொரு டப்பா ''ஆளுங்கட்சிக்கு ஈடா அ.தி.மு.க.,வினரும் எலக்சன் களத்துல இறங்கி, வேலை பார்க்க ஆரம்பிச்சிட்டங்களாமே...''

''ஆமாப்பா... கட்சி ஆண்டு விழாவையொட்டி, பப்ளிக் மீட்டிங் நடத்திட்டு வர்றாங்க. சின்னியம்பாளையத்துல நடந்த மீட்டிங்கிற்கு வந்த லேடீஸ்க்கு, டோக்கன் கொடுத்தாங்க. மறுநாள் அவுங்களுக்கு பிளாஸ்டிக் டப்பா கொடுத்தாங்க. 'இதெல்லாம் முன்னோட்டம். தைப்பொங்கல் சமயத்திலும், எலக்சன் சமயத்திலும் இன்னும் ஏராளமான பரிசுப்பொருள் கொடுக்கப் போறோம்னு' ரத்தத்தின் ரத்தங்கள் பெருமையா சொல்லிட்டு இருக்காங்க,''

''வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு, போற பூத் நிர்வாகிகளுக்கும் பணம் கொடுத்து அனுப்புறாங்களாமே...''

''ஆமாப்பா... எலக்சனுக்கு வாக்காளர் பட்டியல் ரொம்ப முக்கியம். அது கரெக்டா இருக்குதான்னு செக் பண்றதுல உடன்பிறப்புகளும், ரத்தத்தின் ரத்தங்களும் ரொம்ப மெனக்கெடுறாங்க. இப்போ, ரெண்டு கட்சியில இருந்தும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு போற இடங்களுக்கு கூடவே போறாங்க. ரத்தத்தின் ரத்தங்களுக்கு கட்சி நிர்வாகிகள், செலவுக்கு ஆயிரம் ரூபா வீதம் கொடுத்தனுப்புறாங்க,''

வீடு இங்கே; ஓட்டு அங்கே! ''கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டுல வசிக்கிறவங்களுக்கு, நடத்துன ஸ்பெஷல் கேம்ப்புக்கு வந்த கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் விசாரிச்சப்போ, ஒவ்வொருத்தரும் சொன்ன பதிலை கேட்டு, தலை சுத்திருச்சாமே...''

''யெஸ்... நீ சொல்றது கரெக்டுதாம்ப்பா... அந்த ஏரியாவுல, 1,848 வீடு இருக்கு. இது, கவுண்டம்பாளையம் தொகுதிக்குள்ள வருது. அதனால, தெற்கு தொகுதியான ரேஸ்கோர்ஸ்ல இருந்து யாரெல்லாம் வந்திருங்காங்கன்னு விசாரிச்சாங்க. அவுங்க பெயரை லிஸ்ட்டுல இருந்து நீக்குறதுக்கு படிவம் 8 கொடுத்துட்டு வந்திருக்காங்க,''

''ஒருத்தரு, எனக்கு சொந்த ஊர் தொண்டாமுத்துாரு. அங்கேயே ஓட்டு இருக்கட்டும்னு சொல்லியிருக்காரு. இன்னொருத்தரோ, எங்க குடும்ப ஓட்டு திருப்பூர்ல இருக்குன்னு கூறியிருக்காரு. வேற ஒருத்தரு, 'ரேஸ்கோர்ஸ்லயே என்னோட ஓட்டு இருக்கட்டும்; அந்த பூத்துல கூட்டம் இருக்காது; அஞ்சு நிமிஷத்துல ஓட்டு போட்டுட்டு வந்துரலாம்'னு ரொம்ப கூலா சொல்லி இருக்காரு.

அதைக்கேட்டு, ஆபீசர்கள் 'ஷாக்' ஆகிட்டாங்க. ரேஸ்கோர்ஸ்ல இருந்து இடப்பெயர்ச்சி ஆனவங்க பெயர் 'லிஸ்ட்' எடுத்து, பட்டியல்ல நீக்கறதுக்கு முடிவு செஞ்சிருக்காங்க,'' என்றபடி, கேன்டீனில் இருந்து வெளியே வந்த சித்ரா, மரத்தடியில் நின்றிருந்த போலீஸ் ஆபீசர் ஒருத்தரை சந்தித்து விட்டு வந்தாள்.

பிரிவுபச்சார விழா 'பார்க்கிங்' ஏரியாவில் காத்திருந்த மித்ரா, ''நம்மூர்ல இருந்து 'டிரான்ஸ்பராகி' போற ஆபீசருக்கு, தடபுடலா பிரிவுபச்சார விழா நடத்தப் போறாங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள்.

''ஆமாப்பா... கலெக்சன் நடக்குதாம். பங்சன் ஏற்பாடுகளை கான்ட்ராக்ட் நிறுவனமும், ரியல் எஸ்டேட் நிறுவனமும் செய்றதா சொல்றாங்க. அன்பு பரிசா, வைர நெக்லஸ் கொடுக்கப் போறதா, ஒரு 'டாக்' ஓடிட்டு இருக்கு,''

அதைக்கேட்டு வாயை பிளந்த மித்ரா, ''பலன் அடைஞ்சவங்க குடுக்கறாங்க...அது கிடக்கட்டும், பெ.நா.பாளையத்துல வனத்துறை கடைநிலை ஊழியர்கள், மன உளைச்சல்ல இருக்கறதா கேள்விப்பட்டேனே...'' என கேட்டாள்.

''அதுவா, 3 பீட்டுக்கு 2 வனக்காவலர், 2 வனக்காப்பாளர்களே இருக்காங்க. டிரைவர் பணி, அலுவலகப் பணிக்கு போயிருவாங்க. ராத்திரி, பகல்னு தொடர்ச்சியா பணிப்பளு இருந்துட்டே இருக்கு. லீவு எடுக்க, ஆபீசர்ஸ் அனுமதிக்கறதே இல்லையாம். பணிப்பளுவை குறைக்க தன்னார்வலர்கள் மாதிரி, 2 தற்காலிக பணியாளர்களை நியமிச்சுருக்காங்க. அவங்களுக்கு, மாசம் 10 ஆயிரம் ஆபீசரே கொடுத்துடுறார். அதுலயும் கை வச்சுடுறாராம்,''

இ - பைக் பழுது ''ரோந்து, அலுவலக பணிக்காக கொடுத்த இ--பைக் பராமரிக்காம பழுதடைஞ்சு கிடக்கு. தற்காலிக பணியாளர்கள் சொந்த காசுல பெட்ரோல் போட்டா, அலுவலக பணிக்காக பயன்படுத்திக்கறாராம். டீ, சாப்பாடு கூட வாங்கித் தர்றது இல்ல. வனக்காவலர்கள் இரவுப் பணியும் பார்த்து, பகல்லயும் வேலை செயறாங்க. ஹைஆபீசர் கவனத்துக்கு கொண்டு போக முடியாம தவிக்கிறாங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

பின் இருக்கையில் அமர்ந்த மித்ரா, ''பாரதியார் யுனிவர்சிட்டியில பொறுப்புக்குழு உறுப்பினர் அப்பாயின்மென்ட் சம்பந்தமா, கம்ப்ளைன்ட் கெளம்பியிருக்கே...'' என, 'சப்ஜெக்ட்' மாறினாள்.

''மித்து, அந்த யுனிவர்சிட்டிக்கு இன்னும் துணைவேந்தர் நியமிக்கலை. புதுசா நியமிக்கறதுக்கு பதிலா, அவரது வேலைகளை கவனிக்கறதுக்கு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிச்சிருக்காங்க. இப்போ, உறுப்பினர் நியமனமே விதி மீறி நடந்திருக்கிறா, 'பகீர்' குற்றச்சாட்டு கெளம்பியிருக்கு,''

''ஏன்னா... பொறுப்புக்குழு உறுப்பினர் பதவிக்கு யார் யாரை நியமிக்கலாம்னு, யு.ஜி.சி., பல்வேறு விதிகளை வகுத்திருக்கு. அதை மீறி ஒருத்தரை நியமிச்சிருக்கறதா செனட் மெம்பர்கள் போர்க்கொடி துாக்கியிருக்காங்க.

ஆராய்ச்சி பற்றி எந்த அனுபவமும் இல்லாத, அரசியல் செல்வாக்குள்ள ஒருத்தரை, சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலை மீறி நியமிச்சிருக்கறதா சொல்றாங்க. அவர் மேல விஜிலென்ஸ் கேசும் இருக்குதாம்... '' என்றபடி, கமிஷனர் அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த சித்ரா, காந்திபுரம் நோக்கி, ஸ்கூட்டரை செலுத்தினாள்.






      Dinamalar
      Follow us