/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குறுக்கு வழியில் லே-அவுட்டுகளுக்கு அனுமதி ஏன்? கோவை மாநகராட்சி நகரமைப்புக் குழு அதிருப்தி
/
குறுக்கு வழியில் லே-அவுட்டுகளுக்கு அனுமதி ஏன்? கோவை மாநகராட்சி நகரமைப்புக் குழு அதிருப்தி
குறுக்கு வழியில் லே-அவுட்டுகளுக்கு அனுமதி ஏன்? கோவை மாநகராட்சி நகரமைப்புக் குழு அதிருப்தி
குறுக்கு வழியில் லே-அவுட்டுகளுக்கு அனுமதி ஏன்? கோவை மாநகராட்சி நகரமைப்புக் குழு அதிருப்தி
ADDED : அக் 21, 2024 03:46 AM
கோவை, : கோவை மாநகராட்சி பகுதியில் புதிதாக உருவாகியுள்ள லே-அவுட்டுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான தீர்மானங்களை, நகரமைப்பு குழுவுக்கு அனுப்பாமல், மாமன்ற கூட்டங்களுக்கு நேரடியாக கொண்டு வருவதால், அக்குழுவினர் அதிருப்தியில் உள்ளனர்.
மேயர் தலைமையில் மாமன்ற கூட்டங்கள் நடத்துவதற்கு முன், நிலைக்குழு தலைவர்கள் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்றி, மன்றத்துக்கு பரிந்துரைப்பது வழக்கம். சில மாதங்களாக, நிலைக்குழுக்களுக்கு தீர்மானங்கள் அனுப்பப்படாமல், அந்தந்த துறை அலுவலகங்களில் இருந்து நேரடியாக மாமன்ற கூட்டத்துக்கு பொருள் வைக்கப்படுகிறது. இது, ஆளுங்கட்சி கூட்டணி கவுன்சிலர்கள் மத்தியில், விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சூழலில், இம்மாதத்துக்கான மாமன்ற கூட்டம் வரும், 23ல் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக கவுன்சிலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 84 தீர்மானப் பொருட்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. அதில், புதிதாக உருவாக்கப்பட்ட லே-அவுட்டுகளில் சாலை மற்றும் பொது ஒதுக்கீட்டு இடங்களை மாநகராட்சிக்கு தான கிரையம் செய்து, நகர ஊமைப்புத்துறை ஒப்படைப்பு செய்திருப்பதாக கூறி, 21 தீர்மானங்களுக்கு பின்னேற்பு அனுமதி கோரப்பட்டிருக்கிறது.
பின்னேற்பு என்றால், மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனரால் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு விடும். மாமன்ற கூட்டத்தின் போது, ஒப்புதல் தீர்மானம் வைக்கப்படும். 2023ம் ஆண்டு அக்., மாதம் நகர ஊரமைப்புத்துறையில் உருவாக்கப்பட்ட கோப்புகளை, ஓராண்டு கழித்து, அனுமதி கோரி, மாநகராட்சிக்கு இப்போது வந்திருக்கிறது. அவற்றை நகரமைப்பு குழு வாயிலாக கொண்டு வராமல், குறுக்கு வழியில் ஏற்கனவே அனுமதி வழங்கி விட்டு, பின்னேற்பு தீர்மானமாக மன்றத்துக்கு கொண்டு வருவது, ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுதொடர்பாக, மாநகராட்சி நகரமைப்பு குழுவினர் கூறியதாவது:
லே-அவுட் அனுமதி தொடர்பான தீர்மானங்களை, நகரமைப்பு குழு கூட்டத்துக்கு அனுப்பாமல், மன்றத்துக்கு நேரடியாக கொண்டு சென்று, நிறைவேற்றுகின்றனர். இது, சட்ட விதி மீறல். இத்தவறை தொடர்ந்து செய்கின்றனர்.
ஜூலை மாதம், 102 லே-அவுட்டுகளுக்கு அனுமதி தரப்பட்டது. இம்மாதம் நடைபெற உள்ள கூட்டத்துக்கு, 21 தீர்மானங்கள் கவுன்சிலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்கு வழங்கிய தான கிரையத்தில், பொது ஒதுக்கீடு இடம் மற்றும் சாலை வழங்கிய விபரம் தீர்மானத்தில் இல்லை; கமிஷனர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறதா என்பது தெளிவில்லை. பொத்தாம் பொதுவாக, நகரமைப்பு குழு கவனத்துக்கே தெரியாமல் மன்றத்துக்கு தீர்மானம் கொண்டு செல்கின்றனர். ஜூலை மாதம் முறைகேடாக நிறைவேற்றிய தீர்மானங்கள் வாயிலாக, பல கோடி ரூபாய் கை மாறியதாக தகவல் வருகிறது.
அதேபோல், இப்போதும் முறைகேடு நடந்திருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது. இவ்விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு, நிலைக்குழுக்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்க வேண்டும்; அக்குழுக்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பட்டு செயல்பட அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

