தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உரிமை கோராத வாகனங்களை... எதற்காக வைத்திருக்க வேண்டும்?

உரிமை கோராத வாகனங்களை... எதற்காக வைத்திருக்க வேண்டும்?

உரிமை கோராத வாகனங்களை... எதற்காக வைத்திருக்க வேண்டும்?


ADDED : செப் 02, 2025 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2025 09:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொண்டாமுத்துார்; கோவை மாவட்டத்தில் உள்ள புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களில், வழக்குகள் முடிந்த பின்பும் உரிமை கோரப்படாத வாகனங்கள், நுாற்றுக்கணக்கில் உள்ளன. புதர் மண்டி, மண்ணில் புதையும் அவ்வாகனங்களை ஏலம் விட்டால், அரசுக்கு வருமானம் கிடைப்பதோடு, போலீஸ் ஸ்டேஷன்களில் இடப்பற்றாக்குறைக்கும் தீர்வு கிடைக்கும்.

கோவையில் 33 சட்டம் - ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்கள், 6 அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் இருக்கின்றன. தினமும் நடத்தப்படும் சோதனையின்போது, உரிய ஆவணங்களின்றி வரும் வாகனங்கள், மது அருந்தி வருவோரிடம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இவை தவிர, சாலை விபத்துக்களில் சிக்கும் வாகனங்கள், குற்ற வழக்குகளில் சிக்கிய வாகனங்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப்பொருட்கள் கடத்த பயன்படுத்திய வாகனங்கள், ஸ்டேஷன்களில் நிறுத்தப்படுகின்றன.

வழக்குகளை முடிப்பதில் ஏற்படும் தாமதம்; வழக்கு முடிந்த பின்பும் உரிமை கோர வராதது போன்ற காரணங்களால், புதரில் சிக்கி, மண்ணில் புதையும் சூழலில் வாகனங்கள் உள்ளன.

ஏனெனில், மது அருந்தி வாகனம் ஓட்டுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. சிறிய வண்டிகளில் வருவோர், அபராதமாக அவ்வளவு தொகையை செலுத்த முன்வருவதில்லை. வாகனங்களையும் மீட்க முயற்சிப்பதில்லை.

இவை தவிர, குற்ற வழக்கில் சிக்கிய பல வாகனங்கள், குற்ற வழக்குகள் முடிந்த பிறகும், அவற்றின் உரிமையாளர்களால் உரிமை கோரப்படாமல் ஸ்டேஷன்களில் உள்ளன.

வழக்கமாக உரிமை கோராமல் உள்ள வாகனங்களை ஏலம் விடுவது வழக்கம். 2022க்கு பின் இன்னும் ஏலம் விடப்படாததால், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் தேங்கியுள்ளன.

பெரும்பாலான ஸ்டேஷன்களில், இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை நிறுத்தக்கூட இடமில்லை. ஏலம் விடுவதால், இடப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்; அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் உரிமை கோரப்படாத வாகனங்கள் எத்தனை உள்ளன என்கிற விபரம் சேகரிக்கப்படுகிறது. அந்தந்த வி.ஏ.ஓ.,க்களிடம் சான்று பெற்ற பின், ஏலம் விடப்படும்' என்றனர்.

மது அருந்தி வாகனம் ஓட்டுவோருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகையை செலுத்தினால் மட்டுமே வாகனங்கள் விடுவிக்கப்படுகின்றன. சிறிய வண்டிகளில் வருவோர், அபராதமாக அவ்வளவு தொகையை செலுத்த முன்வருவதில்லை. வாகனங்களையும் மீட்க முயற்சிப்பதில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us