/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பரவலாக பெய்த கோடை மழை; உஷ்ணம் தணிந்ததால் மகிழ்ச்சி
/
பரவலாக பெய்த கோடை மழை; உஷ்ணம் தணிந்ததால் மகிழ்ச்சி
பரவலாக பெய்த கோடை மழை; உஷ்ணம் தணிந்ததால் மகிழ்ச்சி
பரவலாக பெய்த கோடை மழை; உஷ்ணம் தணிந்ததால் மகிழ்ச்சி
ADDED : ஏப் 02, 2025 07:49 PM
வால்பாறை; வால்பாறையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக மழைப்பொழிவு இல்லை. இதனால் பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் கீழ் உள்ள மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் சரிந்தது. மேலும், வெயிலின் காரணமாக, மக்களும், சுற்றுலா பயணியரும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கோடை மழை பரவலாக பெய்கிறது. நேற்று மதியம் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், காற்றுடன் கனமழை பெய்தது. மழையால், கோடை வெயிலின் உஷ்ணம் தணிந்தது. இதனால், மக்களும், சுற்றுலா பயணியரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நேற்று காலை, 8:00 மணி வரை, ஆழியாறு - 8, நவமலை - 7, பொள்ளாச்சி - 44 என்ற அளவில் மழை பெய்தது.