ADDED : செப் 21, 2026 07:43 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: காரமடையில் வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்க, மனவளக்கலை மன்ற அறக்கட்டளையில் மனைவி நல வேட்பு விழா நடந்தது. விழாவுக்கு தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
50க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்று, வேதாத்திரி மகரிஷி அருளிய, மனைவி நல வேட்பு குறித்து கூறிய கவிதை வரிகளையும், அருட்காப்பு வரிகளையும், சத்திய பிரமாணமாக ஏற்றுக்கொண்டனர்.
பேராசிரியர் முத்துசங்கர் நிகழ்ச்சியை வழி நடத்தினார்.
அறக்கட்டளை செயலாளர் சத்தியமூர்த்தி, திட்ட அலுவலர் கோமதி, பேராசிரியர்கள் துணைப் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.
