/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காம்பவுண்ட் சுவரை இடித்த காட்டு யானை
/
காம்பவுண்ட் சுவரை இடித்த காட்டு யானை
ADDED : நவ 09, 2025 10:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: தடாகம் வட்டாரத்தில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரிக்கிறது. யானைகளின் வரவை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு முயற்சி மேற்கொண்டும் பலனில்லாததால், மலையோர கிராமங்களில் ஊடுருவி, பயிர் சேதங்களை ஏற்படுத்துகிறது. தவிர, ரேஷன் கடைகள் உள்ள பகுதிகளில் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அரிசி மூட்டைகளை சேதப்படுத்துகின்றன.
தடாகம் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் பகுதிக்குள், அங்கிருந்த ரேஷன் கடை பின்புறம், சுதாகர் தோட்டத்தின் காம்பவுண்ட் சுவரை இடித்து, தோட்டத்துக்குள் நுழைந்து வாழை மரங்களின் குருத்துகளை சாப்பிட்டு சேதப்படுத்தியது. அதிகாலை மலையடிவாரம் நோக்கி சென்றது.

