UPDATED : செப் 21, 2026 11:05 PM
ADDED : செப் 21, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
சாடிவயல்;சாடிவயலில், சீங்கப்பதி அரசு உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இரண்டு வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. ஒரு வகுப்பறையில், சத்துணவு அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று அதிகாலை 2 காட்டு யானைகள் வந்தன. ஒரு யானை சுற்றுச்சுவரை தாண்டி உள்ளே புகுந்தது. அரிசி இருந்த வகுப்பறையின் பின்பக்க ஜன்னலை, தந்தத்தால் குத்தி உடைத்து, உள்ளே இருந்த 30 கிலோ அரிசி மூட்டையை வெளியே எடுத்து கிழித்து அரிசியை சாப்பிட்டது. பின், பழைய கட்டடத்தின் சுவரையும் உடைத்தது.
வனத்துறையினர் வந்து யானைகளை காட்டுக்குள் விரட்டினர். அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனர்.
