/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை
/
ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை
ADDED : அக் 17, 2025 11:35 PM

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் அருகே ரேஷன் கடையை, காட்டு யானை சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை வடக்கு பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலையோரம் கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் மலையோர கிராமங்களில் உள்ள வேளாண் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
யானைகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டாலும், பிரச்னைக்கு இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.
நேற்று முன்தினம் காலை, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, சின்னதடாகம் அருகே உள்ள மடத்தூர், ராமநாதபுரம், வரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்தது.
அப்போது மடத்தூரில் உள்ள ரேஷன் கடையின் கதவை உடைத்து, காட்டு யானை உள்ளே இருந்த அரிசி மூட்டையை வெளியே இழுத்து போட்டு, தின்று சேதப்படுத்தியது. ராமநாதபுரம் பகுதியில் வாழை தோட்டத்தையும் சேதப்படுத்தியது. விடிய, விடிய அதே பகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானை, அதிகாலை மலையடிவாரம் நோக்கி சென்றது. காட்டு யானைகளின் தொடர் பிரச்னைகளால் சின்னதடாகம் வட்டாரத்தில் விவசாயம் செய்வது, பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கூறினர்.