/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு நடுநிலைப்பள்ளிக்கு காட்டு யானைகள் 'விசிட்'
/
அரசு நடுநிலைப்பள்ளிக்கு காட்டு யானைகள் 'விசிட்'
ADDED : நவ 28, 2025 05:06 AM

வால்பாறை: வால்பாறை அருகே, அரசு பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானைகள், பள்ளி கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியது.
வால்பாறை அடுத்துள்ளது உருளிக்கல் எஸ்டேட். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 40 மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கூட்டமாக வந்த யானைகள் பள்ளி வளாகத்தில் புகுந்து, கதவு, ஜன்னல்களை உடைத்து. மேலும், பள்ளி வகுப்பறையில் இருந்த தளவாட பொருட்களையும் சேதப்படுத்தியது.
கடந்த மாதம் இதே பள்ளியை யானைகள் சேதப்படுத்தியதால், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கவலையடைந்துள்ளனர். இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் பள்ளியை ஆய்வு செய்தனர்.

