/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறு, குறு விவசாயிகள் நிலத்தில் கிணறு; வேலை உறுதி திட்டத்தில் அமைக்கப்படுமா?
/
சிறு, குறு விவசாயிகள் நிலத்தில் கிணறு; வேலை உறுதி திட்டத்தில் அமைக்கப்படுமா?
சிறு, குறு விவசாயிகள் நிலத்தில் கிணறு; வேலை உறுதி திட்டத்தில் அமைக்கப்படுமா?
சிறு, குறு விவசாயிகள் நிலத்தில் கிணறு; வேலை உறுதி திட்டத்தில் அமைக்கப்படுமா?
ADDED : பிப் 12, 2025 11:18 PM
பொள்ளாச்சி; கிராமங்களில், சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், உள்ளாட்சி அமைப்பு வாயிலாக கிணறுகள் அமைத்துத் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை, மக்காச்சோளம், நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, பருவமழை மற்றும் கிணற்று பாசனத்துக்கு, பல ஆயிரம் ஏக்கரில், காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
அதேபோல், ஆழியாறு மற்றும் திருமூர்த்தி அணைகளில் இருந்து தண்ணீர் திறந்தால் ஆயக்கட்டு பகுதியில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
இருப்பினும், அவ்வபோது, நன்செய் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், மழையளவு குறைந்தாலும், மானாவாரியில் பயிரிடுவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதில், சிறு, குறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அந்தந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், தேவைப்படும் விவசாயிகளின் நிலத்தில், வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
பருவமழை குறைந்தால், நீர்ப்பாசன விவசாயிகள் பயிர் செய்ய முடியாமலும், புதிய விவசாயிகள் திறந்தவெளி கிணறுகள் அமைக்க இயலாத நிலையும் ஏற்படுகிறது. சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்களின் நிலத்தில் கிணறு அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும், முறையாக பின்பற்றப்படுவதில்லை.
அந்தந்த ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், விவசாயிகளின் நிலத்தில் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன ஆதாரமாக, கிணறு அமைக்கப்பட்டால் விவசாயிகள் பயன்பெறுவர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.