/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் பஸ் மீது நடவடிக்கை பாயுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
தனியார் பஸ் மீது நடவடிக்கை பாயுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தனியார் பஸ் மீது நடவடிக்கை பாயுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தனியார் பஸ் மீது நடவடிக்கை பாயுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : டிச 06, 2025 05:43 AM

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி -- கோவை ரோட்டில் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இதில், நேற்று முன்தினம் பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் இருந்து, தனியார் (என்.எம்.எஸ்) பஸ்சில் கிணத்துக்கடவு செல்ல கோடங்கிபாளையத்தை சேர்ந்த வீராசாமி, 50, என்பவர் ஏறியுள்ளார். அப்போது, கிணத்துக்கடவில் பஸ் நிற்காது எனக்கூறி, வடக்கிபாளையம் பிரிவில் அவரை வழுக்கட்டாயமாக கண்டக்டர் இறக்கி விட்டுள்ளார்.
அதன்பின், வேறு பஸ்சில் கிணத்துக்கடவு வந்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து ஆட்டோ ஓட்டுநர்களிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அந்த தனியார் பஸ்சை இரவு நேரத்தில் கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.
இதில், தனியார் பஸ் தரப்பில் இனிமேல் இதுபோன்று நடக்காது என, உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
கிணத்துக்கடவில் தனியார் பஸ் நிறுத்துவது குறைந்து வருகிறது. இதை தடுக்க, ஆர்.டி.ஓ., சார்பில் கிணத்துக்கடவு மேம்பாலம் துவங்கும் மற்றும் முடியும் இடத்தில் அறிவிப்பு வைத்திருந்தும், அதை மதிக்காமல் தனியார் பஸ் ஓட்டுநர்கள் செயல்படுகின்றனர். மக்கள் தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தினாலும், போலீஸ் மற்றும் ஆர்.டி.ஓ., ஆபீசில் புகார் அளித்தும் பயனில்லாமல் போகிறது. இதைத் தவிர்க்க விதி மீறும் பஸ்சின் உரிமையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, கூறினர்.

