தனியார் பல்கலைகழகங்கள் அதிகரித்தால் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
தனியார் பல்கலைகழகங்கள் அதிகரித்தால் ஏழை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?
UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 07:24 PM
கோவை: தனியார் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கான விதிகளை தளர்த்த தமிழக அரசு சட்டம் கொண்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் 12 ஏக்கர், பிற மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 18 ஏக்கர், மாநிலத்தின் பிற பகுதிகளில் 25 ஏக்கர் நிலம் இருந்தால் தனியார் பல்கலை தொடங்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மசோதா ஆளுநர் வழியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து முற்போக்கு இயக்கம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தது. அவர்கள் கூறியதாவது:
தனியார் பல்கலை செலுத்த வேண்டிய நிரந்தர வைப்பு நிதி ரூ.50 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தனியார் பல்கலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏற்கனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளைவிட தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவற்றில் கல்வி கட்டணம், நன்கொடை, தேர்வு கட்டணம் அதிகமாக இருப்பதால், விளிம்புநிலை சமூக மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. இடஒதுக்கீடும் பின்பற்றுவதில்லை, என்றனர்.
