/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் பஸ்களில் நடக்குமா 'ப்ரீத் அனலைசர்' பரிசோதனை! பயணியர் எதிர்பார்ப்பு
/
தனியார் பஸ்களில் நடக்குமா 'ப்ரீத் அனலைசர்' பரிசோதனை! பயணியர் எதிர்பார்ப்பு
தனியார் பஸ்களில் நடக்குமா 'ப்ரீத் அனலைசர்' பரிசோதனை! பயணியர் எதிர்பார்ப்பு
தனியார் பஸ்களில் நடக்குமா 'ப்ரீத் அனலைசர்' பரிசோதனை! பயணியர் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 31, 2025 11:47 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மார்க்கமாக இயக்கப்படும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கும் 'பிரீத் அனலைசர்' சோதனை நடத்த பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், ஈரோடு, தேனி உள்ளிட்ட இடங்களில் அரசு பஸ்களை இயக்கிய டிரைவர்கள் சிலர், மதுபோதையில் இருந்ததாக, பயணியர் புகார் தெரிவித்தனர்.
தொடர் புகார்களை அடுத்து, பணிமனைகளில் இருந்து பஸ்களை இயக்கத்துக்கு எடுத்துச் செல்லும் டிரைவர், பணிக்கு வரும் நடத்துநரிடம் மது வாடை இல்லாதததை உறுதி செய்து, பணிக்கு அனுமதிக்க கிளை மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில், 'ப்ரீத் அனலைசர்' வாயிலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, பஸ் ஸ்டாண்டில் பணிபுரியும் அலுவலர்கள், தணிக்கையாளர்களும், டிரைவர், கண்டக்டர்களிடம் மது வாடை இல்லாத நிலையை உறுதி செய்தும் வருகின்றனர்.
இதேபோல, பொள்ளாச்சி மார்க்கமாக இயக்கப்படும் தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கும் 'ப்ரீத் அனலைசர்' சோதனை நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயணியர் கூறியதாவது:
பொள்ளாச்சி மார்க்கமாக இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பஸ்கள், அதிவேகமாகவே இயக்கப்படுகின்றன. பஸ்சில் அனுமதிக்கு மாறாக கூடுதல் பயணியரை ஏற்றுவதும், படியில் தொங்கல் பயணத்துக்கு அனுமதிப்பதும் தொடர்கதையாகிறது.
இந்த விதிமீறல் இருக்கும் நிலையில், சில தனியார் பஸ்களில் டிரைவர், கண்டக்டர்களின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படுகிறது.
அதனால், இவர்களுக்கு அவ்வபோது 'ப்ரீத் அனலைசர்' சோதனை நடத்த துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.