/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உப்பிலிபாளையம் சுரங்கப்பாதையில் கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா?
/
உப்பிலிபாளையம் சுரங்கப்பாதையில் கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா?
உப்பிலிபாளையம் சுரங்கப்பாதையில் கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா?
உப்பிலிபாளையம் சுரங்கப்பாதையில் கார்கள் செல்ல தடை விதிக்கப்படுமா?
ADDED : டிச 01, 2025 05:39 AM

கோவை: அவிநாசி ரோடு, கூட்ஸ் ஷெட் ரோடு, மில் ரோடு மற்றும் ப்ரூக் பீல்ட்ஸ் ரோடு என நான்கு ரோடுகளை, உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதை இணைக்கின்றன.
பெரும்பாலான வாகன ஓட்டிகள் மேம்பாலத்தை தவிர்த்து, சுரங்கப்பாதையில் செல்கின்றனர். இன்னும் சிலர், மேம்பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சமயங்களில், சுரங்கப்பாதையில் செல்வர். அதனால், எந்நேரமும் வாகன போக்குவரத்து காணப்படும்.
சுரங்கப்பாதையில் இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, ஆட்டோ, சரக்கு வாகனங்கள், வேன்கள், கார்களும் செல்கின்றன. அவிநாசி ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டுக்குச் செல்லவும், ப்ருக் பீல்ட்ஸ் ரோட்டில் வருவோர் அவிநாசி ரோடு, மில் ரோடு, கூட்ஸ் ஷெட் ரோடு செல்வதற்கு திரும்பும்போதும், போக்குவரத்து சிக்கல் ஏற்படுகிறது.
இதேபோல், மில் ரோடு மற்றும் கூட்ஸ் ஷெட் ரோட்டில் இருந்து வருவோர், ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டுக்கும், அவிநாசி ரோட்டுக்கும் செல்ல முயற்சிக்கும் போது, நெருக்கடிக்குள் சிக்கி விடுகின்றனர். இதன் காரணமாக, சுரங்கப்பாதையில் அவிநாசி ரோடு வழித்தடத்திலும், ப்ரூக் பீல்ட்ஸ் ரோடு வழித்தடத்திலும், வாகனங்கள் தேங்குகின்றன.
இதற்கு தீர்வு காண, சுரங்கப்பாதையில் கார்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோ மட்டும் செல்லஅனுமதிக்க வேண்டும். மற்ற வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தை சுற்றிச் செல்லும் வகையில், நடைமுறையை மாற்ற போக்குவரத்து போலீசார் முன் வர வேண்டும்.

