/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கான்கிரீட் வீடு கிடைக்குமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
கான்கிரீட் வீடு கிடைக்குமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
கான்கிரீட் வீடு கிடைக்குமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
கான்கிரீட் வீடு கிடைக்குமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : மே 19, 2025 11:16 PM

அன்னுார்; அபாய நிலையில் உள்ள வீடுகளுக்கு பதில் புதிய வீடு வழங்க எல்லப்பாளையம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரியாம்பாளையம் ஊராட்சி, எல்லப்பாளையம் காலனியில், 70க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 25 வீடுகளில் காரைகள் பெயர்ந்து சுவர்கள் விழும் அபாய நிலையில் உள்ளன. மேற்கூரைகள் பல இடங்களில் விரிசல்களுடன் உள்ளன. ஓடுகள் உடைந்து மழை பெய்தால் வீட்டுக்குள் மழை நீர் வருகிறது.
இது குறித்து காலனி மக்கள் கூறுகையில், 'எங்களுக்கு வீடு பழுது பார்க்கும் திட்டத்தில் நிதி ஒதுக்காமல் புதிதாக வீடு கட்டித் தர வேண்டும். தினக் கூலிக்கு வேலைக்கு செல்கிறோம். இந்த நிலையில் சொந்தமாக பல லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்ட வழியில்லை. எனவே, அரசு எங்களுக்கு தொகுப்பு வீடு ஒதுக்கி தர வேண்டும். அபாய நிலையில் உள்ள வீடுகளில் அச்சத்துடன் வாழ்க்கை நடத்தி வருகிறோம்,' என்றனர்.