/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டோரம் கழிவு கொட்டுவது தடுக்கப்படுமா? கேமரா பொருத்தி கண்காணிக்க கோரிக்கை
/
ரோட்டோரம் கழிவு கொட்டுவது தடுக்கப்படுமா? கேமரா பொருத்தி கண்காணிக்க கோரிக்கை
ரோட்டோரம் கழிவு கொட்டுவது தடுக்கப்படுமா? கேமரா பொருத்தி கண்காணிக்க கோரிக்கை
ரோட்டோரம் கழிவு கொட்டுவது தடுக்கப்படுமா? கேமரா பொருத்தி கண்காணிக்க கோரிக்கை
ADDED : டிச 06, 2025 04:59 AM

கிணத்துக்கடவு: பொள்ளாச்சி - கோவை ரோட்டில் இருந்து சோழனூர் செல்லும் ரோட்டோரம் உள்ள நீரோடையில், இறந்த நிலையில் கன்று குட்டியை வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிணத்துக்கடவு, சோழனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தேகவுண்டம்பாளையம் பிரிவு அருகே, ரோட்டின் ஓரத்தில் அதிகளவு இறைச்சிக் கழிவுகளும், இதன் அருகாமையில் உள்ள நீரோடையில் அளவுக்கு அதிகமாக குப்பையும் கொட்டி செல்வதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் நிலவுகிறது.
இதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் சிலர், ரோட்டோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவு மற்றும் குப்பையை அகற்றம் செய்யக்கோரி, ஊராட்சி நிர்வாகத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் மனு அளித்தனர்.
இந்நிலையில், குப்பை கொட்டும் இடத்தை நேரில் பார்வையிட்டு ஊராட்சி நிர்வாகத்தினர் அகற்றம் செய்தனர். கடந்த, இரு தினங்களுக்கு முன் மீண்டும் இறைச்சிக் கழிவும், நீரோடையில் குப்பையும் மூட்டை மூட்டையாக வீசப்பட்டதால், கடும் துர்நாற்றம் வீசியது.
சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகம் மற்றும் வடக்கிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், நீரோடையில் உள்ள மூட்டைகளை பிரித்துப் பார்த்தபோது, இறந்த கன்றுக்குட்டியை கட்டி வீசியிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், அங்கிருந்த குப்பை மற்றும் இறந்த கன்றுக்குட்டியை உடனடியாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றம் செய்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது: சோழனூர் மற்றும் பொள்ளாச்சி - கோவை ரோடு சுற்று வட்டாரத்தில் இறைச்சி கடை வைத்திருப்பவர்கள் சிலர், நீரோடை மற்றும் ரோட்டோரம் கழிவை வீசி செல்கின்றனர். இதனால், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து சென்று வரும் போது துர்நாற்றம் வீசுகிறது.
கடந்த சில நாட்களாக குப்பை மற்றும் இறைச்சி கழிவு கொட்டி வரும் நிலையில், தற்போது இறந்த கன்றுக்குட்டியை நீரோடையில் வீசி சென்றது வேதனையளிக்கிறது.
மேலும், இது போன்ற செயல்களால் அருகில் உள்ள விளை நிலம் மற்றும் தண்ணீர் மாசடைகிறது. வரும் நாட்களில் இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி, குப்பை கொட்டுபவர்களை கண்காணிக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
வேலி அமைக்க முடிவு ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:
சோழனுாரில் கொட்டப்பட்டிருந்த குப்பை மற்றும் இறைச்சி கழிவு அகற்றம் செய்யப்பட்டுள்ளது. நீரோடையில் வீசப்பட்டிருந்த இறந்த கன்றுக்குட்டியை அகற்றி புதைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்று சம்பவங்கள் வரும் காலங்களில் நடக்காமல் இருக்க, 'குப்பை கொட்டக்கூடாது' என, ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பிளீச்சிங் பவுடர் துாவப்பட்டுள்ளது. விரைவில் வேலி அமைக்கப்படும். மேலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, கூறினர்.

