/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதியூரில் சிறுத்தை நடமாட்டமா? மாட்டை கொன்றதால் மக்கள் பீதி
/
ஆதியூரில் சிறுத்தை நடமாட்டமா? மாட்டை கொன்றதால் மக்கள் பீதி
ஆதியூரில் சிறுத்தை நடமாட்டமா? மாட்டை கொன்றதால் மக்கள் பீதி
ஆதியூரில் சிறுத்தை நடமாட்டமா? மாட்டை கொன்றதால் மக்கள் பீதி
ADDED : ஏப் 03, 2025 11:39 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஆதியூர் பகுதியில், சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியுள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஆதியூரில் பாலசுப்ரமணியம் என்பவரது தோட்டத்தில் பசு மாட்டினை மர்மவிலங்கு ஒன்று கடித்து கொன்றது.
மாடு இறந்த இடத்தில், கால்தடங்களை கண்ட விவசாயிகள், பொதுமக்கள், சிறுத்தை தான் மாட்டை அடித்து கொன்றதாகவும், பாதுகாப்பாக இருக்குமாறு மற்ற விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த தகவல், காட்டுத்தீ போல பரவியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும், புரவிபாளையம் அரசுப்பள்ளியில் உள்ள மாணவர்களின் பெற்றோர், மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டாம் என ஆசிரியர்களிடம் வலியுறுத்தினர்.
இது குறித்து, தகவல் அறிந்த வடக்கிப்பாளையம் போலீசார், வருவாய்துறை, வனத்துறை அதிகாரிகள், சிறுத்தை நடமாட்டமா அல்லது மர்மவிலங்கு நடமாட்டமா என்பது குறித்து விசாரிக்கின்றனர்.
மேலும், அங்கு ஆறு பேர் கொண்ட வனத்துறை குழு அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாக வனத்துறை மற்றும் போலீசார் தெரிவித்தனர்.