/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர், பஸ் வசதியின்றி மக்கள் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
/
குடிநீர், பஸ் வசதியின்றி மக்கள் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குடிநீர், பஸ் வசதியின்றி மக்கள் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
குடிநீர், பஸ் வசதியின்றி மக்கள் அவதி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ADDED : செப் 23, 2025 08:24 PM

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு, குரும்பபாளையம் கிராமத்தில் குடிநீர், பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
கிணத்துக்கடவு, வடசித்தூர் ஊராட்சிக்குட்பட்ட குரும்பபாளையம் கிராமத்தில், கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக குடிநீர் வசதி இல்லை. இங்கு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு தரைமட்டத்தொட்டி, மூன்று போர்வெல்கள் உள்ளது.
இதில், ஒரு போர்வெல் இரண்டு ஆண்டுக்கு முன் தண்ணீர் இல்லாததால் மூடப்பட்டது. மீதமுள்ள இரண்டு போர்வெல்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ளது.
இங்குள்ள மக்கள், ஊராட்சியில் இருந்து வழங்கும் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தண்ணீர் மக்களுக்கு பற்றாக்குறையாக உள்ளது. இதனால் இங்கு உள்ளவர்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை உள்ளது.
மேலும், இப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலர் கால்நடைகளுக்கு, போர்வெல்லில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர்.
மேலும், இப்பகுதி மக்கள் விசேஷ நாட்களில் வெளியூர் செல்லவும், அவசர சிகிச்சைக்கு மருத்துவமனை செல்லவும் பஸ் வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் இருந்து வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என பலதரப்பட்ட மக்களும் கடுமையாக பாதிக்கின்றனர்.
தற்போது இப்பகுதியில், அரசுத் திட்ட வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் புதிதாக அமைவதால், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. எனவே, அரசு பஸ் வசதியும், ஒன்றிய நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதியும் ஏற்படுத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து, ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'குரும்பபாளையம் பகுதியில் 4 கி.மீ., தூரத்திற்கு குழாய் பதிக்கும் பணிக்கு அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிக்கான டெண்டர் விடப்படும். மக்கள் நலன் கருதி குடிநீர் பிரச்னை விரைவில் சரி செய்யப்படும். பஸ் இயக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும், என்றனர்.