/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெடுஞ்சாலை துறை பராமரிக்கும் ரோடுகளை மாநகராட்சி எடுக்குமா? எந்த வேலையும் செய்ய முடியாமல் அதிருப்தி
/
நெடுஞ்சாலை துறை பராமரிக்கும் ரோடுகளை மாநகராட்சி எடுக்குமா? எந்த வேலையும் செய்ய முடியாமல் அதிருப்தி
நெடுஞ்சாலை துறை பராமரிக்கும் ரோடுகளை மாநகராட்சி எடுக்குமா? எந்த வேலையும் செய்ய முடியாமல் அதிருப்தி
நெடுஞ்சாலை துறை பராமரிக்கும் ரோடுகளை மாநகராட்சி எடுக்குமா? எந்த வேலையும் செய்ய முடியாமல் அதிருப்தி
ADDED : அக் 23, 2025 11:40 PM
கோவை: கோவை மாநகராட்சி, 257.04 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது; 100 வார்டுகள் அமைந்திருக்கின்றன. 2,618.08 கி.மீ. நீளமுள்ள சாலைகள், மாநகராட்சியால் பராமரிக்கப்படுகின்றன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினரால், 219.60 கி.மீ. நீளமுள்ள சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.
நகரின் பிரதான சாலைகளான அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடு உள்ளிட்டவை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றன. அதன் காரணமாக, இச்சாலைகளில் எந்தவொரு அபிவிருத்தி வேலையையும் மாநகராட்சியால் செய்ய முடிவதில்லை.
தேசிய நெடுஞ்சாலையில் வேலை செய்ய வேண்டுமெனில், அனுமதி கேட்டு டில்லிக்கு கடிதம் எழுத வேண்டியிருக்கிறது. மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் அனுமதி பெற வேண்டுமெனில், சென்னைக்கு கடிதம் எழுத வேண்டியுள்ளது. துறை வாரியாக அனுமதி பெறுவதே சிக்கலாக இருப்பதால், வேலைகள் செய்வதற்கு தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
அவிநாசி ரோட்டில் புதிதாக கட்டிய ஜி.டி. நாயுடு மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் முன், பழைய மேம்பால 'ரவுண்டானா'வை விஸ்தரிக்க வலியுறுத்தப்பட்டது. அவசர அவசியம் கருதி, முதல்கட்டமாக, ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டுக்குச் செல்லும் வாகனங்களுக்காக ஒரு பாதை உருவாக்கினால், போக்குவரத்து நெருக்கடி தவிர்க்கலாம் என சாலை பாதுகாப்பு குழு வலியுறுத்தியது. அதை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்கவில்லை. மாறாக, பழைய மேம்பால ரவுண்டானா பகுதியை நான்கு புறமும் விஸ்தரிக்க முடிவெடுத்து, ரூ.20 கோடிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பியது; இன்று வரை அனுமதி கிடைக் கவில்லை. இதேபோல், டெக்ஸ்டூல் பாலம் முதல் கணபதி சூர்யா மருத்துவமனை வரை சாலை விரிவாக்கப் பணியும் தாமதமாகி வருகிறது. இதுபோல், சாலை விரிவாக்கம், பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பதிப்பு உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டு வருவதால், நகர் பகுதியில் உள்ள சாலைகளை மாநகராட்சி வசம் எடுக்க மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, மாநகராட்சி வடக்கு மண்டல த லைவர் கதிர்வேல் கூறுகையில், ''மாநகராட்சி எல்லைக்குள் செல்லும் தேசிய, மாநில நெடுஞ்சாலை துறைகளுக்கு சொந்தமான சாலைகளில், எவ்வித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ள முடிவதில்லை. துறை ரீதியான அனுமதி பெறுவதற்கே பெரும் சிரமமாக இருக்கிறது. அச்சாலையை மாநகராட்சி வசம் எடுத்துக் கொண்டால், தேவையான வேலைகளை உடனுக்குடன் செய்யலாம். இதற்கான பணிகளை மாநகராட்சி அதிகாரிக ள் மேற்கொள்ள வேண்டும்,'' என்றார்.

