/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள் மாற்றப்படுமா?
/
போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள் மாற்றப்படுமா?
போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள் மாற்றப்படுமா?
போக்குவரத்துக்கு இடையூறான மின்கம்பங்கள் மாற்றப்படுமா?
ADDED : நவ 11, 2025 12:02 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை, விபத்து ஏற்படும் முன், மாற்றியமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகரில், அதிகரிக்கும் வாகனங்கள், மக்கள் தொகைக்கு ஏற்ப நகர சாலைகள் விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. பயன்பாட்டில் உள்ள சாலைகளிலும் ஆக்கிரமிப்பு, 'பார்க்கிங்' விதிமீறலால் இடையூறு ஏற்படுகிறது.
இது ஒருபுறமிருக்க, சில சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களாலும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அவ்வகையில், தபால் அலுவலகம் எதிரே உள்ள மின்கம்பத்தால், வாகன ஓட்டுநர்கள் திணறி வருகின்றனர்.
இரவு நேரங்களில் வேகமாக வாகனங்களில் செல்வோர், மின்கம்பம் மீது மோதி விபத்து உள்ளாகும் நிலையும் உள்ளது. இதுபோன்று, நகரில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களைக் கண்டறிந்து, மாற்றிமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது: பொள்ளாச்சியில், அனைத்து சாலைகளும் விரிவாக்கம் செய்யப்பட்டு, முக்கிய சந்திப்புகளில் ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நகரச் சாலையில் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் இடம் வரை சாலையோர வியாபாரிகள், தனியார் கடைக்காரர்கள் ஆக்கிரமித்து விடுகின்றனர்.
நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் புதிய சாலைகள், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களையும், டிரான்ஸ்பார்மர்களையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களையும் கண்டறிந்து, மாற்றியமைக்க வேண்டும். சாலை விரிவாக்கம் செய்த இடங்களில், போக்குவரத்துக்கு இடையூறாக அத்துமீறி வாகனங்கள் பார்க்கிங் செய்வதை தடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.

