/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பில்' இன்றி 'சிரிஞ்ச்' விற்பனை; மருந்து கடைகள் உரிமம் ரத்து?
/
'பில்' இன்றி 'சிரிஞ்ச்' விற்பனை; மருந்து கடைகள் உரிமம் ரத்து?
'பில்' இன்றி 'சிரிஞ்ச்' விற்பனை; மருந்து கடைகள் உரிமம் ரத்து?
'பில்' இன்றி 'சிரிஞ்ச்' விற்பனை; மருந்து கடைகள் உரிமம் ரத்து?
UPDATED : ஏப் 10, 2025 11:07 PM
ADDED : ஏப் 10, 2025 10:03 PM
பொள்ளாச்சி; ஆனைமலையில், 'பில்' இல்லாமல், 'சிரிஞ்ச்' விற்பனை செய்த இரு மருந்துக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
'மருந்து கடைகள், அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா' என்பது குறித்து, சீரான இடைவெளியில் மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.
அவ்வகையில், மருந்தக ஆய்வாளர்கள் உமாமகேஸ்வரி, ராஜேஸ்குமார் அடங்கிய குழுவினர், ஆனைமலை பகுதியில் உள்ள மருந்துக் கடைகளில், ஆய்வு நடத்தினர். அப்போது, இரு கடைகளில், 'பில்' இல்லாமல், உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் சிரிஞ்ச் விற்பனை செய்யப்படுவதை கண்டறிந்தனர்.
இதையடுத்து, அந்த இரு கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய, மருந்து கட்டுப்பாட்டுத்துறைக்கு பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுத்தனர்.
இது குறித்து மருந்தக ஆய்வாளர்கள் கூறியதாவது: மனநல, வலி நிவாரண, துாக்க மாத்திரைகள் சட்டமுறைப்படி டாக்டர் பரிந்துரை சீட்டுக்கு மட்டும் வழங்க வேண்டும். சட்ட விதிகளை மீறும் மருந்து கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கடை உரிமம் ரத்து செய்யப்படும்.
இதனால், மருந்து விற்பனை கடைக்காரர்கள், விதிப்படி மருந்து விற்பனை செய்வதற்கு முன்வர வேண்டும். இவ்வாறு, கூறினர்.