/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் சூழ்ந்த மயானம் சுத்தம் செய்யப்படுமா?
/
புதர் சூழ்ந்த மயானம் சுத்தம் செய்யப்படுமா?
ADDED : பிப் 10, 2025 10:38 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம் மயானத்தை தூய்மை படுத்த வேண்டுமென, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கிணத்துக்கடவு, குளத்துப்பாளையம் ஊராட்சியில் உள்ள மயானதை பயன்படுத்த முடியாத அளவுக்கு, முட்புதர் செடிகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், எரியூட்டும் இடம் முழுவதும் செடிகள் ஆக்கிரமித்துள்ளது. இந்த மயான வளாகம், முறையான பராமரிப்பு இன்றி உள்ளது.
மக்கள் கூறுகையில், 'மயானத்தை தூய்மை படுத்தி பல மாதங்களாகிறது. சடலத்தை புதைக்க, எரியூட்ட வரும் உறவினர்கள், அமர்வதற்கு கூட முறையான கட்டமைப்பு வசதி இல்லை. மேலும், இங்கு பாம்பு மற்றும் விஷ ஜந்துக்கள் தொல்லை இருப்பதால், மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே, இந்த வளாகத்தின் சுவற்றை வெள்ளை அடித்து, வளாகத்தினுள் வளர்ந்துள்ள புதர்களை அகற்றம் செய்து, முறையாக பராமரிக்க வேண்டும்,' என்றனர்.