/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தங்கும் விடுதிகளுக்கு அனுமதி இருக்கா? சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
/
தங்கும் விடுதிகளுக்கு அனுமதி இருக்கா? சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
தங்கும் விடுதிகளுக்கு அனுமதி இருக்கா? சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
தங்கும் விடுதிகளுக்கு அனுமதி இருக்கா? சுற்றுலாத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு
ADDED : நவ 29, 2024 12:18 AM

வால்பாறை; வால்பாறையில், தங்கும் விடுதிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
வால்பாறை வரும் சுற்றுலா பயணியர் வசதிக்காக, தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள் உள்ளன. குறிப்பாக, வால்பாறை நகர், ரொட்டிக்கடை, சோலையாறுடேம் மற்றும் பல்வேறு எஸ்டேட் பகுதியில், நுாற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
யானைகள் வழித்தடத்தை மறித்து பெரும்பாலான எஸ்டேட்களில் ரிசார்ட்களும் கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக சுற்றுலாத்துறை அதிகாரிகள், வால்பாறை நகரில் செயல்படும் தங்கும் விடுதிகள், அதன் கட்டமைப்பு குறித்தும், அடிப்படை வசதிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.
மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் ஜெகதீஸ்வரி கூறியதாவது:
தங்கும் விடுதிகளுக்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும், விடுதிகளின் விபரம், எத்தனை பேர் தங்கலாம், போதிய வசதிகள் உள்ளதா போன்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
கட்டடம் கட்ட துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா, தங்கும் விடுதிக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இவ்வாறு, கூறினார்.
விதிமுறை மீறல்
வால்பாறை நகரில், விதிமுறையை மீறி பல மாடி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. புதிய கட்டட கட்டுமானப்பணிகளும் நடக்கிறது. முறையாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள பல மாடிகட்டடங்களால் வால்பாறை நகருக்கும், தங்கும் மக்களுக்கும் போதிய பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, வால்பாறை மலைப்பகுதியில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் குறித்து உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

