தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காற்றாலை மின் உற்பத்தி உயர்கிறது மழை குறைய காரணம் என்ன?

 காற்றாலை மின் உற்பத்தி உயர்கிறது மழை குறைய காரணம் என்ன?

 காற்றாலை மின் உற்பத்தி உயர்கிறது மழை குறைய காரணம் என்ன?


ADDED : ஜன 31, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை தெற்கிலுள்ள மூன்று தாலுகாக்களில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளது; பருவமழை பொழிவு சரிந்துள்ளதாக விவசாயிகள் சந்தேகிக்கின்றனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் இரு பருவ மழைக்காலங்களில் வெளியீடு செய்யும் தரவுகளின் அடிப்படையில், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் சூலுார் தாலுகாக்களில் சராசரி மழைப்பொழிவு 750 மி.மீ.க்கும் கீழே குறைந்துள்ளது.

இதற்கு இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் காற்றாலை மின்னுற்பத்தியே காரணம் என்று விவசாயிகள் கருதுகின்றனர்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு, தமிழ்நாடு மின்சார வாரியம்மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலையினர் இணைந்து தெளிவுபடுத்த வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் டாக்டர் ரங்கநாதன் கூறியதாவது:

கோவை மாவட்டத்திலுள்ள பத்து தாலுகாக்களில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் சூலுார் ஆகிய தாலுகாக்களில் முன்பு இருந்த பாசன வசதி தற்போது இல்லை.

வடகிழக்கு பருவமழைகாலங்களில் மேற்குறிப்பிட்ட தாலுகாக்களில் சராசரியாக 420 மி.மீ. மழை பெய்ய வேண்டும் ஆனால் 300 மி.மீ. பெய்வதே சிரமம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது.

விவசாயிகள் எதிர்பார்த்த அளவு மழைப்பொழிவு இல்லை. நிலத்தடிநீர் மட்டம் குறைந்துள்ளது. இதற்கான அறிவியல் பூர்வமான காரணங்கள் என்ன என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கவேண்டும்.

இவ்வாறு ரங்கநாதன் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us