/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீசுக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது
/
போலீசுக்கு மிரட்டல் விடுத்த பெண் கைது
ADDED : பிப் 06, 2025 09:40 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி ஜே.எம்.,2 கோர்ட்டில், பணியில் இருந்த பெண் போலீசுக்கு, கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை, கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே, கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை பெண் போலீசாக சாந்தி பணியாற்றுகிறார். இவர், நேற்று நீதிமன்ற அலுவலில் இருந்த போது, கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த, 2018ம் ஆண்டு பதிவான திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட கோட்டூர் தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த சூரிய ஜெகதீஷ்,30, என்பவரின் அம்மா சரஸ்வதி,55, முதல்நிலை பெண் போலீசை, தகாத வார்த்தையால் திட்டியும், எனது மகன் வெளியே வந்ததும் உன்னை கொலை செய்ய சொல்கிறேன், எனக்கூறி மிரட்டல் விடுத்தார்.
பெண் போலீசிடம், பெண் ஒருவர் சப்தம் போட்டு மிரட்டல் விடுத்த சம்பவம், கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெண் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரஸ்வதியை கைது செய்தனர்.

