ADDED : மே 01, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.
பொள்ளாச்சி, நரிக்கல்பதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மாகாளியின் மனைவி சாந்தி. இவர்களுக்கு, ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில், மீண்டும் சாந்தி கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, '108' ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் டிரைவர் குபேர், மருத்துவ உதவியாளர் தங்கேஸ்வரி ஆகியோர் விரைந்து சென்றனர். சாந்திக்கு அதிக வலியால், பிரசவமாகும் சூழல் ஏற்பட்டது.
வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்தனர். அதன்பின், தாயும், சேயும் பாதுகாப்பாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.