/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பெட் எக்ஸ்' மோசடியில் ரூ.7 லட்சம் இழந்த பெண்
/
'பெட் எக்ஸ்' மோசடியில் ரூ.7 லட்சம் இழந்த பெண்
ADDED : டிச 25, 2024 07:57 AM
கோவை : கோவை, சரவணம்பட்டி, லட்சுமி நகரை சேர்ந்தவர் வித்யா, 39 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 6ம் தேதி 'பெட் எக்ஸ்' கூரியர் நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், 'சட்ட விரோத பொருட்கள் அடங்கிய பார்சல் வந்துள்ளது. அதற்கான பணம் வித்யாவின் வங்கி கணக்கில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த நபர் அளித்த (@mumbaincb901003) என்ற முகவரிக்கு, வித்யா அழைத்தார். அப்போது அந்த நபர், வித்யாவின் வங்கி கணக்கை ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி, வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை அனுப்புமாறு தெரிவித்தார். வித்யா, 13 தவணைகளில் ரூ.7 லட்சத்து 72 ஆயிரத்து 996 பணத்தை, மோசடி நபர் அளித்த கணக்குகளுக்கு அனுப்பினார். பணத்தை பெற்றுக்கொண்ட நபர் திருப்பி அனுப்பவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.