ADDED : ஆக 29, 2025 10:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சூலுார் எஸ்.வி.எல்., நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜூலியா, நேற்று முன்தினம் இவர் கடையில் இருந்தபோது, பைக்கில் இரு நபர்கள் வந்தனர். சிகரெட் கேட்டுள்ளனர். ஜூலியா திரும்பி சிகரெட்டை எடுக்கும்போது, அவரது கழுத்தில் இருந்த நகையை, அந்த நபர்கள் பறிக்க முயன்றனர்.
நகையை கெட்டியாக பிடித்து கொண்டதால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், ஜூலியாவை தாக்கி கீழே தள்ளி, மூன்றரை சவரன் நகையை பறித்து தப்பினர். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து, அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து சூலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

