/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண் கை முறிவு; தந்தை, மகனுக்கு வலை
/
பெண் கை முறிவு; தந்தை, மகனுக்கு வலை
ADDED : ஆக 20, 2025 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்; கோவை, கணேசபுரம், முல்லை நகரை சேர்ந்தவர் கனிமொழி, 42. இவர் வீட்டின் அருகே வசிப்பவர் ரத்னசாமி, இவரது மகன் கார்த்திகேயன். இரு வீட்டினருக்கும் இடையே இட பிரச்னை உள்ளது. இந்நிலையில் கனிமொழி தனது குடும்பத்துடன், புதியதாக கட்டப்படும் வீட்டிற்கு சென்றார்.
அங்கு வந்த ரத்னசாமி, மகன் கார்த்திகேயன் ஆகியோர் இவர்களை திட்டி, தாக்கினர். மரக்கட்டையால் தாக்கியதில், கனிமொழியின் தாய்க்கு கை எலும்பு முறிவு ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். கனிமொழி புகாரில் சுந்தராபுரம் போலீசார் ரத்னசாமி, கார்த்திகேயன் இருவரையும் தேடுகின்றனர்.