/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பெண்கள் நினைத்தால் மாற்றங்களை உருவாக்கலாம்'; சொற்பொழிவில் அறிவுறுத்தல்
/
'பெண்கள் நினைத்தால் மாற்றங்களை உருவாக்கலாம்'; சொற்பொழிவில் அறிவுறுத்தல்
'பெண்கள் நினைத்தால் மாற்றங்களை உருவாக்கலாம்'; சொற்பொழிவில் அறிவுறுத்தல்
'பெண்கள் நினைத்தால் மாற்றங்களை உருவாக்கலாம்'; சொற்பொழிவில் அறிவுறுத்தல்
ADDED : ஆக 20, 2025 12:40 AM

சூலுார்; 'பெண்கள் நினைத்தால் சமுதாயத்தில் ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகும்,' என, விழிப்புணர்வு சொற்பொழிவில் சமூக சேவகி சாருமதி அசோக் பேசினார்.
முத்துக்கவுண்டன் புதூர் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், மாதந்திர விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சி, அரங்கத்தில் நடந்தது. இயக்க தலைவர் சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.
'நாம் பார்த்த, கேட்ட, படித்த நல்ல விஷயங்கள்' என்ற தலைப்பில், சமூக சேவகி சாருமதி அசோக் பேசியதாவது:
பரந்து விரிந்துள்ள சமுதாயத்தில், எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் ஒரு மோசமான நிகழ்வை வைத்து ஒட்டு மொத்த சமுதாயமும் கெட்டு போய்விட்டதாக பேசுவது இயல்பாகி விட்டது. நல்லவற்றை நினைத்தால் நல்லதே நடக்கும்.
மதுரையில் கடைக்கோடி கிராமத்தில் இருந்த சின்னப்பிள்ளை நினைத்ததால் தான் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன. தென்காசியை சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு, நமது உழைப்பு நமது நாட்டுக்கே என்ற எண்ணத்தில், தனது ஜோகோ நிறுவனத்தை, அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்தார். பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கிறார்.
ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட இதிகாசங்கள் படிக்கிறோம்.அதில் கூறப்படும் நல்வழிகள் குறித்து சிந்திக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும், எப்படி வாழக்கூடாது, எப்படி ஆட்சி செய்ய வேண்டும், குடும்பம் என்றால் என்ன, அதை எப்படி வழி நடத்த வேண்டும் என, எண்ணற்ற கேள்விகளுக்கு அவற்றில் வழிகாட்டல்கள் உள்ளன.
பெண்கள் நினைத்தால் அனைத்து துறையிலும், சமுதாயத்திலும், நாட்டிலும் நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும். அதற்காக அனைவரும் உறுதி ஏற்றக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.