/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நாரி சக்தி வந்தன்' மராத்தான் ஆர்வமுடன் பங்கேற்ற மகளிர்
/
'நாரி சக்தி வந்தன்' மராத்தான் ஆர்வமுடன் பங்கேற்ற மகளிர்
'நாரி சக்தி வந்தன்' மராத்தான் ஆர்வமுடன் பங்கேற்ற மகளிர்
'நாரி சக்தி வந்தன்' மராத்தான் ஆர்வமுடன் பங்கேற்ற மகளிர்
ADDED : மார் 05, 2024 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் மோடியின் வெற்றியே, மகளிர் முன்னேற்றத்திற்கான சக்தி என்பதை பறைசாற்றும் வகையில், 'நாரி சக்தி வந்தன்' என்ற மராத்தான் போட்டி, பா.ஜ., சார்பில் நேற்று நடந்தது.
கோவை நேரு விளையாட்டரங்க வளாகத்திலிருந்து, நேற்று மாலை துவங்கிய மராத்தான், நேரு விளையாட்டரங்கை, மூன்று முறை சுற்றி வந்தது. முன்னதாக, பா.ஜ.,மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் கொடியசைத்து, பேரணியை துவக்கி வைத்தார்.
முதல் வகுப்பு படிக்கும் குழந்தை முதல், 80 வயது பெண்மணிகள் வரை, ஏராளமானோர் மராத்தான் போட்டியில், ஆர்வத்துடன் பங்கேற்றனர்.