/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகளிர் கிரிக்கெட்; ராமகிருஷ்ணா 'சாம்பியன்'
/
மகளிர் கிரிக்கெட்; ராமகிருஷ்ணா 'சாம்பியன்'
ADDED : ஜன 22, 2025 11:51 PM
கோவை; கோபியில் நடந்த கல்லுாரிகளுக்கு இடையேயான மகளிர் கிரிக்கெட்டில், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி சாம்பியன்ஷிப் வென்றது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட, கல்லுாரிகளுக்கு இடையிலான எட்டு ஓவர் மகளிர் கிரிக்கெட் போட்டி, ஈரோடு மாவட்டம், கோபி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்தது.
இதில் எட்டு அணிகள் பங்கேற்ற நிலையில், 'நாக் அவுட்' முறையை அடுத்து நான்கு அணிகள் 'லீக்' முறையில் விளையாடின.
அதன்படி, ஈரோடு வி.இ.டி., கலை கல்லுாரிக்கு எதிரான முதல் போட்டியில், ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி, 107 ரன்கள் எடுத்தது. வீராங்கனைகள் ஸ்வேதா, 54 ரன்களும், சந்தியா, 42 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து விளையாடிய, வி.இ.டி., கல்லுாரி அணியினர், 5 விக்கெட்டுக்கு, 41 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
நிர்மலா மகளிர் கல்லுாரி அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில், ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, 8 ஓவர்களில் இரு விக்கெட்டுக்கு, 76 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய நிர்மலா கல்லுாரி அணி, 7 விக்கெட்டுக்கு, 35 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்த போட்டியில், கோபி கலை அறிவியல் கல்லுாரி அணி ஐந்து விக்கெட்டுக்கு, 25 ரன்கள் எடுத்தது.
ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி இரு விக்கெட்டுக்கு, 29 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நிறைவில், ராமகிருஷ்ணா கல்லுாரி அணி முதலிடம் பிடித்து 'சாம்பியன்ஷிப்' வென்றது. வெற்றி பெற்ற அணியினரை, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.