/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு
/
வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிப்பு
ADDED : பிப் 13, 2026 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்: ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவு காவலர் உள்ளிட்ட பல ஆயிரம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் பிப். 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தது.
அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், அலுவலர்கள் பலர் பணிக்கு வரவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன. சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் முத்துராஜ் கூறுகையில், ''கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும்,'' என்றார்.

